குவியும் பாராட்டு!! மக்களவை தேர்தலில் 50% பெண்களுக்கு வாய்ப்பளித்த நாம் தமிழர் கட்சி

பாராளுமன்றத் தேர்தலில் மற்ற கட்சிகளைவிட நாம் தமிழர் கட்சி 50 சதவிகிதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 25, 2019, 02:47 PM IST
குவியும் பாராட்டு!! மக்களவை தேர்தலில் 50% பெண்களுக்கு வாய்ப்பளித்த நாம் தமிழர் கட்சி title=

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் "கரும்பு விவசாயி" சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. (கடந்த தேர்தல்களில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.)

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள 40 தொகுதிக்களுக்கான மக்களவை தேர்தலில் போட்டியிட 50 சதவிகிதம் பெண்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது நாம் தமிழர் கட்சி. அதாவது போட்டியிடும் 40 தொகுதிக்களில் 20 தொகுதியில் பெண்களை நிறுத்தி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் மற்ற கட்சிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு குறித்து பார்த்தால், தமிழகத்தின் இருபெரும் கட்சி என அழைக்கப்படும் திமுக இரண்டு பெண்களுக்கும், அதிமுக ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 20 பெண் வேட்பாளர்களின் விவரங்கள் கீழே தரப்பட்டு உள்ளது.

  தொகுதி பெண் வேட்பாளர் பெயர்
1. வேலூர் தீபலட்சுமி
2. பெரம்பலூர் க. சாந்தி
3. வடசென்னை பி. காளியம்மாள்
4. பொள்ளாச்சி அ. சனுஜா
5. இராமநாதபுரம் தி. புவனேஸ்வரி
6. கடலூர் சா. சித்ரா
7. திருநெல்வேலி பா. சத்யா
8. தருமபுரி ர. ருக்மணிதேவி
9. திருவள்ளூர் (தனி) ம. வெற்றிச்செல்வி
10. விழுப்புரம் (தனி) பிரகலதா
11. நாகப்பட்டினம் (தனி) பொ. மாலதி
12. மயிலாடுதுறை கு. சுபாஷினி
13. நீலகிரி (தனி) சே.மணிமேகலை
14. ஈரோடு மா.கி.சீதாலட்சுமி
15. காஞ்சிபுரம் (தனி) த.ரஞ்சனி
16. தென் சென்னை அ.ஜெ. ஷெரின்
17. மதுரை க. பாண்டியம்மாள்
18. சிவகங்கை வே. சக்திப்பிரியா
19. ஆரணி அ.தமிழரசி
20. புதுச்சேரி நி. சர்மிலா பேகம்

 

Trending News