மு.க ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது... தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்பி உதயகுமார்!

ADMK RB Udhaykumar in Election Campaigning in Virudhunagar: காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பது போல மு.க ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தால் அச்சம் வந்துவிட்டது என்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 7, 2024, 02:05 PM IST
  • சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு.
  • திடீர் சமையல் போல தேர்தலுக்காக வந்த விருந்தாளி ராதிகா சரத்குமார்.
  • மு.க ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தால் அச்சம் வந்துவிட்டது.
மு.க ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது... தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்பி உதயகுமார்! title=

ADMK RB Udhaykumar in Election Campaigning in Virudhunagar: விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திருமங்கலம் தொகுதி கரிசல்பட்டி கிராமத்தில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் முத்துசெல்வம் ஏற்பாட்டில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர் மேலும் கும்ப மரியாதை அளித்து வரவேற்பு கொடுத்தனர்.

ஆர் பி உதயகுமாருக்கு சிறப்பான வரவேற்பு

இதே போல கள்ளிக்குடியில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், ராமையா ஏற்பாட்டில் கள்ளிக்குடியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன் உள்ளிட்ட மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரித்து பேசியதாவது:

திமுக மு க ஸ்டாலின் கழக பொதுச் செயலாளரை தரம் தாழ்ந்து பேசுகிறார்... எடப்பாடியார் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் மு க ஸ்டாலின், எடப்பாடியார் விவசாயி அல்ல நெசவாளி என கூறுகிறார். இன்றைக்கு மீத்தேன் ஈத்தேன் டெல்டா மாவட்டங்களில் கையெழுத்து போட்டது மு க ஸ்டாலின். அதை பாதுகாப்பு மண்டலமாக நெற்களஞ்சியத்தை பாதுகாத்துக் கொடுத்தவர் எடப்பாடியார். காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பது போல மு க ஸ்டாலினுக்கு தோல்வி பயத்தால் அச்சம் வந்துவிட்டது. இன்றைக்கு 40 தொகுதியிலும் திமுக தோல்வி அடைய போகிறது அதிமுக 40 தொகுதியில் வெற்றி பெறும் என்றார்.

சகோதரி ராதிகா சரத்குமார் திடீர் வேட்பாளர் 

மாணிக்கத் தாகூருக்கு ஏற்கனவே வாய்ப்பு கொடுத்து விட்டோம் ஒன்றுமே செய்யவில்லை நாடாளுமன்றத்தில் ஒன்றுமே பேசவில்லை. சகோதரி ராதிகா சரத்குமார் வந்துள்ளார்... திடீர் சாம்பார், திடீர் ரசம், திடீர் மோர் வைப்பீர்கள் அதுபோல திடீர் வேட்பாளர் ராதிகா சரத்குமார். தேர்தலுக்கு முன்னாடி ஒருநாளும் வந்ததில்லை. தேர்தலுக்குப் பின்பு ஒருநாள் வரமாட்டார். உங்கள் காலடி நிழலை சுற்றி வருபவர் விஜயபிரபாகரன் அதற்கு அண்ணா திமுக கேரண்டி கொடுக்கிறது என்றார்.

மேலும் படிக்க | வேலூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி தந்ததே திமுக அரசு தான்: நடிகை விந்தியா

பெரும் பிரச்சனையாக உள்ள திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி

திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியில் பெரும் பிரச்சனையாக உள்ளது. சட்டமன்றத்தில் போராட்டம் பண்ணுகிறோம். நாடாளுமன்றத்தில் பேசவில்லை. கப்பலூர் சுங்கச்சாவடி தொடர்பாக எங்கள் மீது வழக்கு உள்ளது. டோல்கேட்டை அகற்றி தருவதாக முக ஸ்டாலின் கூறினார். செய்தீர்களா என்று கேட்டால் சொன்னதை செய்தீர்களா என்று கேட்டார்கள்.. ஜெயிலுக்கு கூட்டி போய்விட்டார்கள். மக்களுக்காக ஒரு நாள் அல்ல ஆண்டு முழுவதும் சிறையில் இருந்தாலும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஒரு நாளும் பின் வாங்க மாட்டோம்.

துரோகம் வென்றதாக வரலாறு இல்லை

இரட்டை இலை சின்னம் என்ன இடைஞ்சல் செய்தது உங்களுக்கு புரட்சித் தலைவர் வெற்றி சின்னம். அம்மா அவர்கள் வளர்த்தெடுத்த சின்னம். எடப்பாடியார் மீட்டெடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனை முடக்க வேண்டும் என்று எதிரிகளும் துரோகிகளும் கைகோர்த்து போராடினார்கள் துரோகம் வென்றதாக வரலாறு இல்லை மீண்டும் இரட்டை இலையை மலர செய்தது எடப்பாடியார் அவர்கள் என சிறப்புரையாற்றினார்.

மேலும் படிக்க | ’அதிமுகவில் ஒரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி’ அமைச்சர் உதயநிதியை ஒருமையில் பேசிய நிர்மலா பெரியசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News