Madras HC: கொரோனாவின் தாக்கத்தால், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் virtual விசாரணைகள் மட்டுமே

 கோவிட் -19 துரிதமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Apr 15, 2021, 11:11 PM IST
  • கொரோனா இரண்டாவது அலையால் மெட்ராஸ் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் மாற்றம்
  • virtual விசாரணைகள் மட்டுமே நடைபெறும்
  • மதுரை உயர் நீதிமன்றக் கிளையும் வீடியோ கான்பிரன்சிங் முறையிலேயே செயல்படும்
Madras HC: கொரோனாவின் தாக்கத்தால், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் virtual விசாரணைகள் மட்டுமே  title=

சென்னை: கோவிட் -19 துரிதமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை மெட்ராஸ் நீதிமன்றத்தில் அனைத்து வழக்குகளும் மெய்நிகர் முறையிலேயே நடைபெறும் என உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் வியாழக்கிழமைன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  

"நாட்டின் பிற இடங்களை விட தமிழ்நாட்டின் நிலைமை கொரோனா விஷயத்தில் மேம்பட்டு இருந்தாலும், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதும் அவசியமானது.  இது தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்றமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நீதிமன்ற நடவடிக்கைகள் உடனடியாக மெய்நிகர் அமர்வுக்கு மாற்றப்படுகிறது, இதனால் நீதிமன்ற கட்டடங்களில் மக்களின் வரத்து கணிசமாகக் குறையும்" என்று உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து ஒரு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ: Covidஐ அடியோடு விரட்ட 5 மருந்துகள் இன்னும் ஐந்து மாதத்தில்...

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவுகிறது என்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜியின் அவதானிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதோடு, இன்று சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணனுடன் அவர் மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்குகளின் விசாரணை ஜாமீன் மற்றும் பிற அவசர நடவடிக்கைகள் தொடர்பாக, தேவைப்பட்டால் அரசாங்க வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகலாம். அதைத் தவிர வேறு அனைத்து விசாரணைகளும் மெய்நிகர் முறையில் மட்டுமே இருக்கும்.

Also Read | Coronavirus Update India: ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

அனைத்து வழக்கறிஞர்களின் அறைகளும் ஏப்ரல் 17 முதல் மூடப்படும். அனைத்து பார் அசோசியேஷன்களிலும் உள்ள நூலகங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும்.

இந்த அறிவிப்பு, உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கும் பொருந்தும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை தொடரும் இந்த ஏற்பாடு ஏப்ரல் 23 வரை தொடரும்.

கொரோனா தொடர்பான நிலைமை ஏப்ரல் 22 ஆம் தேதி மதிப்பாய்வு செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.

ALSO READ: சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News