சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூராய்வு விவகாரத்தில் சென்ன உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது... நாளை இறுதி சடங்கு நடைபெறுமா? இல்லை இன்றே நடைபெறுமா என்ற கேஎள்விகள் எழுந்துள்ளன. முறைப்படி நீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படைய்ல், சிறந்த மருத்துவர்களைக் கொண்டு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டுள்லது என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது எனவே, தேவையில்லாமல் காலதமாதம் செய்வது சரியில்லை என்று ஸ்ரீமதியின் பெற்றோருக்கு அறிவுறுத்திய நீதிபதி, நாளைக் காலை 11 மணிக்குள் உடலை பெற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.
மேலும், காவல் துறையினர், கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை, அவரது பெற்றோர்கள் எப்போது பெற்றுக் கொள்வார்கள் என்பது தொடர்பாக இன்று நண்பகல் 12 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வீட்டில் கட்டப்பட்ட பேனரால் பரபரப்பு
மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடவில்லை என்று தெரிவித்த நீதிபதி, கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற போவதில்லை என நேற்றே திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். ஆனால், பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள் அமைதியாக தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்திய மெட்ராஸ் உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோருக்கு அனுதாபம் தெரிவித்து கொள்வதாகவும், ஆனால், மாணவியின் மறு பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தடயவியல் நிபுணரின் கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது.
மேலும் படிக்க | இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை -தமிழக அரசு
3 மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்ய உத்தரவு
மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது, எனவே ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்திய நீதிபதி, மாணவியின் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.
உடற் கூராய்வு அறிக்கையோடு, உடற்கூராய்வு வீடியோ பதிவுகளையும் ஜிப்மர் மருத்துவ குழுவுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, தகுதியான தடயவியல் நிபுணர்களை கொண்டு அறிக்கையை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.
Kallakurichi schoolgirl death | Madras High Court orders that a three-doctor panel of Puducherry's Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research should assess the autopsy reports
Court also asks the girl's parents to receive her body before 11am tomorrow.
— ANI (@ANI) July 22, 2022
மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ளாவிட்டால், காவல் துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டார். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அனைவரும் தங்களை நீதிபதியாகவும், மருத்துவ நிபுணர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் குறித்து நீதிபதி அதிருப்தியை வெளியிட்டு சாடினார்.
இதனையடுத்து, இன்றோ அல்லது நாளையோ மாணவியின் சடலத்தை பெற்றோர் பெற்றுக் கொள்வார்கள் என்பது தெளிவாகியுள்ளது. மாணவியின் இறுதிச்சடங்குகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு நாளைக்குள் என்ற பதில் கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ