நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை நேற்று வெளியிட்ட கமல்ஹாசன், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை நேற்று கமல்ஹாசன் வெளியிட்டார். இப்பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக கவிஞர் சினேகன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கமல்ஹாசன் கடந்த 20-ஆம் தேதி வெளியிட்டார். இந்த பட்டியலின் படி கமீலா நாசர் மத்திய சென்னை தொகுதியிலும், முன்னாள் போலீஸ் அதிகாரி மவுரியா வடசென்னை தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கோவை கொடீசியா மைதானத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியின் போது பேசிய கமல்ஹாசன் இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும் அறிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-
நாடாளுமன்ற தேர்தல் 2019 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல்#MNMCandidates pic.twitter.com/YJXydnVLSa
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 24, 2019
- காஞ்சீபுரம் (தனி)- ஆனந்தமலை எம்.தங்கராஜ் (இந்திய குடியரசு கட்சி).
- திருவண்ணாமலை- அருள்
- ஆரணி- ஷாஜி
- கள்ளக்குறிச்சி- கணேஷ்
- நாமக்கல்- தங்கவேல்
- ஈரோடு- சரவணகுமார்
- ராமநாதபுரம்- விஜயபாஸ்கர்
- கரூர்- டாக்டர் ஹரிஹரன்
- பெரம்பலூர்- அருள்பிரகாசம்
- தஞ்சாவூர்- சம்பத் ராமதாஸ்
- சிவகங்கை- கவிஞர் சினேகன்
- மதுரை- அழகர்
- தென் சென்னை
- தென் சென்னை- ரங்கராஜன் (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி).
- கடலூர்- அண்ணாமலை
- விருதுநகர்- முனியசாமி
- தென்காசி (தனி)- முனீஸ்வரன்
- திருப்பூர்- சந்திரகுமார்
- பொள்ளாச்சி- மூகாம்பிகை ரத்னம்
- கோவை- டாக்டர் மகேந்திரன்
இதேபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அவர் அறிவித்தார். அந்த வேட்பாளர்கள் விவரம் வருமாறு...
சட்டமன்ற இடைத்தேர்தல் 2019 மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் pic.twitter.com/PnsU0iOMMy
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 24, 2019
- பூந்தமல்லி-பூவை ஜெகதீஷ்
- பெரம்பூர்- பிரியதர்ஷினி
- திருப்போரூர்- கருணாகரன் (இந்திய குடியரசு கட்சி)
- சோளிங்கர்- கே.எஸ்.மலைராஜன் (இந்திய குடியரசு கட்சி)
- குடியாத்தம்- பி.வெங்கடேசன் (இந்திய குடியரசு கட்சி)
- ஆம்பூர்- நந்தகோபால்
- ஓசூர்- பி.ஜெயபால்
- பாப்பிரெட்டிப்பட்டி- நல்லதம்பி
- அரூர்- குப்புசாமி
- நிலக்கோட்டை- டாக்டர் சின்னதுரை
- திருவாரூர்- அருண்சிதம்பரம்.
- தஞ்சாவூர்- துரைஅரசன் (வளரும் தமிழகம் கட்சி).
- மானாமதுரை- ராமகிருஷ்ணன்.
- ஆண்டிபட்டி- தங்கவேல் (வளரும் தமிழகம் கட்சி).
- பெரியகுளம் - பிரபு
- சாத்தூர்- சுந்தர்ராஜ்.
- பரமக்குடி- உக்கிரபாண்டியன்.
- விளாத்திகுளம்- நடராஜ் (தமிழ் விவசாயிகள் சங்கம்)