கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மநீம கமல்ஹாசன்?

Makkal neethi Maiyam: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 5, 2024, 06:00 AM IST
  • கோவையில் போட்டியிடும் கமல்ஹாசன்.
  • மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுகிறார்.
  • இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மநீம கமல்ஹாசன்? title=

கோவை பாராளுமன்ற தொகுதியில் மநீம சார்பில் கமல்ஹாசன் போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கான தேர்தல் பணிக்கான வியூகத்தை பொறுப்பாளர்களுக்கு தலைமை கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கோவை மண்டலத்தில் உள்ள மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்றது. மாநில பொறுப்பாளர்கள், தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மெளரியா செய்தியாளர் சந்தித்தார் அப்போது பேசிய அவர், தேர்தல் வழிமுறைகள் குறித்தும் தேர்தல் பணி குறித்தும் அதற்கான வழிமுறைகள் வகுக்கவும் கட்சியினருக்கு இந்த கூட்டத்தின் மூலம் அறிவுறுத்தி உள்ளோம்.

மேலும் படிக்க | அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?

இந்த கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பாக கோவை மண்டலத்தில் உள்ள ஐந்து பாராளுமன்ற தொகுதியிலும் எவ்வாறு கட்சி பணி செய்ய வேண்டும் தேர்தல் பணியாற்ற வேண்டும் எவ்வாறு ஒன்றிணைந்து இந்த பணியை செய்ய வேண்டும் என  நுணுக்கமாக அறிவுரைகளை வழங்கியுள்ளனர், மிகச் சிறந்த பணியாற்றி வெற்றிக்காக உழைப்பாளர்கள். எங்களுடைய மாவட்ட செயலாளர்கள்  ஒவ்வொரு மாவட்டத்திலும்  தேவையான பூத் கமிட்டிகளை அமைப்பதற்காக பாடுபடுவார்கள் இன்னும் ஒரு சில இடங்களில் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

தேர்தல் பணிக்கான வியூகத்தை வகுத்து கூறியுள்ளோம் ,அதன்படி செயல்பட்டு அவர்கள் வெற்றியை பரிசளிப்பார்கள். யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என எந்த முடிவும் நாங்கள் செய்யவில்லை. தலைவர் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்வார். கூட்டணியை பற்றி எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை, தலைவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார். எத்தனை தொகுதி என்பதை அவர்தான் முடிவு செய்வார், கூட்டணி உள்ளதா இல்லையா என்பதை கமலஹாசன் தான் அறிவிப்பார் என தெரிவித்தார்.

இந்தியா கூட்டணி நாற்பதுக்கு நாற்பது தொகுதியில் வெற்றி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த சின்னக்கரை பகுதியில் பள்ளிவாசல் புதுப்பித்தல் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பள்ளிவாசல் புதுப்பித்தல் பணிகளை பார்வையிட வருகை தந்தார். அவருக்கு பல்லடம் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கட்டிடப் பணிகளை குறித்து அங்கு இருந்து அவர்களிடம் கேட்டு அறிந்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் இதுவரை நடந்திடாத தேர்தலாக இருக்கப் போவதாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சி பணியாற்ற இருக்கின்றது. 

இதற்கான பொதுக்குழு பிப்ரவரி 7ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக தெரிவித்த அவர். குடியுரிமை திருத்த சட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் இதனையடுத்து விஜயின் புதிய அரசியல் கட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் விஜயின் அரசியல் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது மேலும் அவரின் கொள்கைகளை கூர்ந்து கவனிக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் முஜிப்பூர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்சல், தமுமுக பல்லடம் நகரத் தலைவர் யூசுப், சின்னக்கரை பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் மந்திரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | அதிமுக - பாஜகவை சேர்க்கும் முயற்சியில் ஜிகே வாசன்? அவரே சொன்ன பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News