கள்ளக்காதலியை மிரட்ட முயன்று தவறுதலாக தற்கொலை செய்துகொண்ட பாடகர்!

கள்ளக்காதலியை மிரட்ட தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற இசைக்கச்சேரி பாடகர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Aug 20, 2022, 04:42 PM IST
  • விபரீதத்தில் முடிந்த பாடகரின் தற்கொலை முயற்சி
  • கள்ளக்காதலியை மிரட்டுவதாக நினைத்து உயரை மாய்த்த நபர்
கள்ளக்காதலியை மிரட்ட முயன்று தவறுதலாக தற்கொலை செய்துகொண்ட பாடகர்!

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (42). இவர் இசை கச்சேரி குழு வைத்து நடத்தி வந்துள்ளார். திருமணமாகி (மனைவி மேரி) 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில்  இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் பொன்னை அடுத்த மாதாண்டகுப்பம் பகுதியில் வீட்டிற்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து ராஜா வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து கள்ளத்தொடர்பில் இருந்த சித்ராவுக்கும், ராஜாவுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ

இதனால் சித்ராவை பயமுறுத்துவதற்காக, அறையில் படுத்திருந்த சித்ராவை மிரட்டிவிட்டு இவர்கள் தங்கியுள்ள வீட்டின் மற்றொரு அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதற்காக முயன்றுள்ளார். இதனை செல்போன் மூலம் வீடியோவும் எடுத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை தாமதமாக பார்த்த சித்ரா அதிர்ச்சி அடைந்து அவரை கட்டித்தழுவி அழுதுள்ளார்.  இது குறித்து தகவல் அறிந்த பொன்னை காவல் துறையினர் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கள்ளக்காதலுக்காக மனைவி பிள்ளைகளை விட்டு பாடகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்ளும் பதபதைக்க வைக்கும் நேரலை காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தின் நிலுவைத்தொகையை உயர்த்திக் காட்டும் மத்திய அரசு: அமைச்சர் செந்தில் பாலாஜி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News