மிக்ஜாம் புயல்: ரஜினி வீட்டருகே திடீரென பெரும் பள்ளம் - 2 கார், ஆட்டோ, கிரேன் விழுந்ததால் அதிர்ச்சி

சென்னை போயஸ் கார்டனில் ரஜினி வீட்டருகே திடீரென உருவான பெரும் பள்ளத்தில் 2 கார்கள் மற்றும் ஆட்டோ, கிரேன் விழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 4, 2023, 04:56 PM IST
  • ரஜினிகாந்த் வீட்டருகே பெரும் பள்ளம்
  • பள்ளத்தில் விழுந்த 2 கார்கள், ஆட்டோ
  • மிக்ஜாம் புயலின் எதிரொலியால் அதிர்ச்சி
மிக்ஜாம் புயல்: ரஜினி வீட்டருகே திடீரென பெரும் பள்ளம் - 2 கார், ஆட்டோ, கிரேன் விழுந்ததால் அதிர்ச்சி title=

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை விடாமல் கொட்டுகிறது. திரும்பிய திசையெல்லாம் வெள்ள நீர் காட்சியளிப்பதால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றன. குறிப்பாக பேச்சிலர்கள் உணவு கிடைக்காமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். வீடுகள் மற்றும் சாலைகளில் முழங்கால் அளவுக்கும் மேல் தண்ணீர் இருப்பதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பாய்ந்தோடுகிறது. சில இடங்களில் திடீர் பள்ளங்களும் உருவாகின்றன. வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென பள்ளம் உருவானது. அதில் பெட்ரோல் பங்கின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

மேலும் படிக்க | சென்னை மக்களே அலெர்ட்... நிக்காமல் வெளுக்கும் மிக்ஜாம்... வெதர்மேனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

இதேபோல் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் அருகேயும் பெரும் பள்ளம் ஒன்று உருவானது. ராட்சத பள்ளத்தில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு கிரேனும் விழுந்திருக்கிறது. அத்துடன் தென்னை மரங்களும் அந்த பள்ளத்தில் விழுந்திருக்கிறது. இந்த தகவல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது குறித்து மாநகராட்சிக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

சென்னை மழையை பொறுத்தவரையில் விட்டபாடில்லை. செவ்வாய்க்கிழமை காலை அவரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெதர்மேன் பிரதீப்ஜான் பேசும்போது, சென்னையில் வெள்ளம் ஏற்படுமா? என்பதை முன்கூட்டியே கூற முடியாது. இருப்பினும் மற்ற புயல்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் மிக அதிக கனமழை பெய்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. அந்த வகையில் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் இந்த மழை எப்போது குறையும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் இன்று நள்ளிரவு அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து படிப்படியாக கனமழை குறையும் என தெரிவித்திருக்கிறார். அந்தவகையில் பார்க்கும்போது வெள்ளநீர் சூழ்ந்திருக்கும் பகுதிகளில் இருக்கும் நீரின் அளவு செவ்வாய் கிழமை பிற்பகலுக்குப் பிறகு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கலாம். முன்னுரிமையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் நிவாரணப் பணிகளை செய்ய முடுக்கிவிடப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் மாநகராட்சி சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.   

மேலும் படிக்க | சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News