ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மறைமுகமாக தமிழ்நாடு அரசு ஆதரவு: வைகோ

மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்: வைகோ அறிக்கை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 27, 2021, 02:05 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மறைமுகமாக தமிழ்நாடு அரசு ஆதரவு: வைகோ title=

சென்னை: இன்று உச்சநீதிமன்றத்தில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறி விட்டது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ (Vaiko), தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதுக்குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, 1996 இல் இருந்து போராடி வருகின்றேன். தொடர்ந்து உண்ணாவிரதங்கள், நடைபயணங்கள், மறியல், முற்றுகை  என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (Marumalarchi Dravida Munnetra Kazhagam) போராட்டங்கள் நடத்திய அளவிற்கு, தமிழ்நாட்டில் வேறு யாரும் நடத்தியது கிடையாது. 

பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1997 இல் ரிட் மனு தாக்கல் செய்தேன். அதில் நானே வாதாடினேன். 2010 செப்டெம்பர் 28 ஆம் தேதியன்று, ஆலையை மூடுமாறு தீர்ப்பு கிடைத்தது. அதன்பிறகு, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் (Sterlite Plant) தடை ஆணை பெற்றது. 2013 ஏப்ரல் 2 ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலையை இயக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது. 

ALSO READ |  மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட்! தூத்துக்குடியில் பரபரப்பு - போலீசார் குவிப்பு

அதன்பிறகு, நான் தீர்ப்பு ஆயத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தேன். மீண்டும இன்னொரு ரிட் மனு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். 

அந்த ரிட் மனு, இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. .இதற்கு இடையில் நடைபெற்ற போராட்டத்தில்தான் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தமிழ்நாடு அரசு, முழுக்க முழுக்க ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவே வேலை செய்து வந்துள்ளது. 

தற்போது, நாட்டில் ஆக்சிஜன் (Oxygen) தேவை என்ற பெயரில், ஸ்டெர்லைட்டை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கின்றது. தமிழ்நாட்டுக்குத் தேவையான ஆக்சிஜனை மட்டும்தான் ஆக்க வேண்டும்; அதைப் பகிர்ந்து  வழங்குகின்ற அதிகாரமும் தமிழ்நாட்டுக்குத்தான் வேண்டும் என, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

 

ஆனால், இன்று உச்சநீதிமன்றத்தில், ஆக்சிஜன் ஆக்கும் முழு உரிமையும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டு விட்டது. 
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின் கோரிக்கையை, அழுத்தமாக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ய தமிழக அரசு வேண்டும் என்றே தவறி விட்டது. 

ALSO READ |  ஆக்சிஜன் தேவை இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே தன் பொறுப்பில் எடுக்க வேண்டும்: வைகோ

மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.

இவ்வாறு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYe

Trending News