அடுத்தடுத்த அதிரடியில் ஸ்டாலின்... ஊசலாட்டத்தில் 10 மாவட்ட செயலாளர்கள்!

CM Stalin: சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்றும் கட்சி வலுவாக இருந்தால்தான் ஆட்சி வலுவாக இருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசினார்.

Written by - Sudharsan G | Last Updated : May 14, 2023, 03:11 PM IST
  • ஆட்சி எவ்ளோ முக்கியமோ அதைவிட கட்சி முக்கியம் - ஸ்டாலின்.
  • ஒவ்வொரு தொண்டனும், இது ‘நம்மோட ஆட்சி’னு பெருமைப்பட வேண்டும் - ஸ்டாலின்.
  • சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வரும், மற்றவர்கள் காத்திருப்பார்கள் - ஸ்டாலின்.
அடுத்தடுத்த அதிரடியில் ஸ்டாலின்... ஊசலாட்டத்தில் 10 மாவட்ட செயலாளர்கள்! title=

CM Stalin: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலமாக இன்று (மே 14) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசினார். 

அதில் அவர்,"ஆட்சி எவ்வளவு முக்கியமோ அதைவிட கட்சி முக்கியம். இதை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ளவும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். கட்சி வலுவாக இருக்க வேண்டும். நமது கவனம் எல்லாம் கட்சிய வலுப்படுத்துவதிலும், தொண்டர்கள உற்சாகமாக வைத்துக்கொள்வதிலும்தான் அதிகமாக இருக்க வேண்டும். 

காது கொடுத்து கேளுங்கள்

தொண்டர்கள் யாராவது, ஏதாவது குறைகளை கூறினால், என்ன சொல்கிறார்கள் என காது கொடுத்துக் கேளுங்கள். அந்தப் பிரச்சினையை தீர்க்க முடியுமா என பாருங்கள். குறைகளை கூறுகிறவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள்.

மாவட்டச் செயலாளர்களும், பொறுப்பு அமைச்சர்களும் அவரவர் மாவட்டங்களில் இருக்கும் பகுதி – ஒன்றிய – நகர - பேரூர் நிர்வாகிகளோட குறைகளைக் கேட்டு, அதை நிவர்த்தி செய்து கொடுங்கள். குறைகள நிவர்த்தி செய்ய முடியவில்லை என்றால் கூட, அதை சரிசெய்ய முயற்சி செய்து, அதுகுறித்து அவர்களிடம் சொல்லுங்கள். நம்மிடம் குறைகளை கேக்குறதுக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை வந்தாலே, பலருக்கும் பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். மனதில் பெரிய பாரம் குறைந்துவிடும்.

மேலும் படிக்க | MK Stalin: அன்பு செலுத்திடும் அன்னைருக்கு Mothers day வாழ்த்துகள்-முதல்வர் மு.க ஸ்டாலின்

மாவட்டச் செயலாளர்களும் பொறுப்பு அமைச்சர்களும் ஒன்றிய – நகர - பேரூர் நிர்வாகிகளிடம் அனுசரணையாக நடந்துகொண்டால் தான் ஒன்றிய – நகர - பேரூர் கட்சி நிர்வாகிகள் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்பார்கள்.

‘நம்மோட ஆட்சி'

இயக்கம் என்பது தலைமை தொடங்கி, கடைக்கோடி தொண்டன் வரை உளப்பூர்வமாக பிணைந்திருக்கும் அமைப்பு. ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொருத்தருக்கும் ஆதரவும் அன்பும் இருக்க வேண்டும். எந்த மட்டத்திலும் சுணக்கமோ மனவருத்தமோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் எல்லாருடைய பொறுப்பாகும்.

 
ஒவ்வொரு தொண்டனும், இது ‘நம்மோட ஆட்சி’னு பெருமைப்பட வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்படி இருக்கிறார்களா என நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இல்லையென்றால், ஏன் இல்லை என்கிற காரணத்தை ஆராய்ந்து பார்த்து சரி செய்ய வேண்டும்.

நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்

எல்லோருக்கும் ஒரே சமயத்தில் பதவிகளும், பொறுப்புகளும் கிடைப்பதில்லை. சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் அமைச்சராக விருப்பப்படுவதில் தவறில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லையென்றால், அதையே நினைத்து ஏங்கிப்போக வேண்டியதில்லை. 

தொண்டர்கள் பலருக்கும் சட்டமன்ற உறுப்பினராவதற்கு கூட வாய்ப்பு வரவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் வரும், மற்றவர்கள் காத்திருப்பார்கள். உழைப்பவர்களுக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும். அதேசமயம் நம்மிடம் இருக்கும் பதவி, பொறுப்பை வைத்து கட்சியில் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும், உற்சாகமூட்ட வேண்டும்" என்றார். 

திமுகவில் 10 மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார் என தகவல் கூறப்படுகிறது. கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் முக ஸ்டாலின் பேசினார். 

மேலும் படிக்க | IAS Transfer: உதயசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றம்... வெளிநாடு பயணத்திற்கு முன் ஸ்டாலின் அதிரடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News