சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான முறைசாரா உச்சி மாநாட்டின் இரண்டாவது நாள் இன்று (சனிக்கிழமை) தமிழகத்தின் சென்னையில் மீண்டும் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் 28 வரை வுஹானில் நடைபெற்ற தொடக்க உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த இரண்டு நாள் பேச்சுவாரத்தையில் எந்தவொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் அல்லது மற்ற ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படாது என்றாலும், தமிழகத்திற்கு வந்துள்ள சீன அதிபரின் இரண்டாவது நாளில் ஜின்பிங் மற்றும் மோடி ஆகியோர் மற்றும் பிரதிநிதிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர். இரு தலைவர்களுக்கிடையேயான பேச்சுவாரத்தையில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை குறித்து விவாதம் இருக்காது, இருப்பினும், இது சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று வெளியுறவு செயலாளர் விஜய் கே கோகலே அறிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் ஜின்பிங் இடையிலான இரண்டு நாள் முறைசாரா உச்சிமாநாட்டின் முடிவுகள் குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிடுவார்கள்.
3,500 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியா - சீனா எல்லையில் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், அமைதியையும் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து இன்றைய சந்திப்பில் விவாதிக்கலாம்.
சனிக்கிழமையன்று, மோடி மற்றும் ஜின்பிங் ஆகியோர் தஜ் ஃபிஷர்மேன் கோவ் ரிசார்ட்டில் உள்ள டோன்ஜோ ஹாலில் தங்கள் இரண்டாவது முறைசாரா பேச்சுவார்த்தைக்கு ஒருவரையொருவர் சந்திப்பார்கள். இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தூதுக்குழு அளவிலான சந்திப்புக்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிறகு பிரதமர் மோடி ஜின்பிங்க்கு மதியம் 12:45 மணிக்கு மதிய உணவை வழங்குவார். அதன் பின்னர் சீன அதிபர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்படுவார்.
அட்டவணை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்
09:50 மணி: தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ரிசார்ட் & ஸ்பாவுக்கு இருதலைவர்களும் வருகை தருவார்கள்.
10:00 மணி: டெட்டே-இ-டெட் (Tete-e-Tete)
10:50 மணி: பிரதிநிதித்துவ நிலை பேச்சுக்கள் (இடம்: டேங்கோ ஹால், தாஜ் ஃபிஷர்மேன் கோவ் ரிசார்ட் & ஸ்பா / ஃபோட்டோ ஒப்: அதிகாரிகள் மட்டும்)
11:45 மணி: பிரதமர் மோடி மதிய உணவை வழங்குவார்.
12:45 மணி: சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சீன அதிபர் புறப்படுவார்.
13:30 மணி: விமானத்தில் பயணம்
இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, இங்கிருந்து சீன அதிபர் ஜின்பிங் நேராக நேபாளத்திற்கு செல்ல உள்ளார்.