பங்கேற்ற 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தீர்ப்பாக பெற்ற தலைவர் கருணாநிதி

சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட 15 தேர்தல்களில் 13 தேர்தல்களில் பங்கேற்றவர் கலைஞர் கருணாநிதி. இந்த 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தீர்ப்பாக பெற்றார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 3, 2020, 05:55 PM IST
பங்கேற்ற 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தீர்ப்பாக பெற்ற தலைவர் கருணாநிதி title=

சென்னை: இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் கலைஞர் கருணாநிதி (M. Karunanidhi) அவர்கள். சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட 15 தேர்தல்களில் 13 தேர்தல்களில் பங்கேற்றவர் கலைஞர் கருணாநிதி. இந்த 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே மக்களின் தீர்ப்பாய் பெற்ற தலைவர் கருணாநிதி (Muthuvel Karunanidhi).

இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட 15 தேர்தல்களில் 13 தேர்தல்களில் பங்கேற்றவர் கலைஞர் கருணாநிதி. இந்த 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே மக்களின் தீர்ப்பாய் பெற்ற தலைவர் கருணாநிதி.

இதையும் படியுங்கள் | ஒருங்கிணைந்து உதவி செய்வோம் வாருங்கள்; தொண்டர்களை அழைக்கும் MK ஸ்டாலின்...

எப்படி கிடைத்தது இந்த வெற்றிகள்... கட்சிக்கு (Dravida Munnetra Kazhagam) இருந்த பெயராலும், கலைஞரின் பின் நின்ற தொண்டர்களின் கூட்டத்தாளும் எளிதாக கிடைத்துவிட்டதா? இல்லை. அவர் பங்கேற்ற தேர்தல்களில் அவர் கடும் சவால்களை சந்தித்து தான் இந்த சரித்திர வெற்றியினை பெற்றுள்ளார். அதற்கு உதாரணங்கள் தான் 1980 மற்றும் 1991 தேர்தல்கள். இந்த தேர்தல்கள் இவரது வாக்குகள் பெரும் பின்னடைவு பெற்றதினை நாம் மறந்துவிட முடியாது. ஆனாலும் வெற்றியை தன்வசம் ஆக்கினார்.

கலைஞர் (Karunanidhi) அவர்களின் தேர்தல் பயணம் ஒருபார்வை...!!

1951:
சட்டமன்ற தேர்தல்
போட்டியிடவில்லை

1957:
போட்டியிட்ட தொகுதி: குளித்தலை
எதிர் போட்டியாளர்: KA தர்மலிங்கம் [காங்கிரஸ்]
வெற்றி விழுக்காடு: 8296 வாக்குகள் (17.23%)

1962:
போட்டியிட்ட தொகுதி: தஞ்சாவூர்
எதிர் போட்டியாளர்: பரிசுத்த நாடார் [காங்கிரஸ்]
வெற்றி விழுக்காடு: 1928 வாக்குகள் (3.05%)

இதையும் படியுங்கள் | உரிய கால அவகாசத்துடன் 10th பொதுத்தேர்வை நடத்த வேண்டும்: ஸ்டாலின்!!

1967:
போட்டியிட்ட தொகுதி: சைதாப்பேட்
எதிர் போட்டியாளர்: விநாயகமூர்த்தி [காங்கிரஸ்]
வெற்றி விழுக்காடு: 20482 வாக்குகள் (23.38%)

1971:
போட்டியிட்ட தொகுதி: சைதாப்பேட்
எதிர் போட்டியாளர்: காமலிங்கம் [காங்கிரஸ்]
வெற்றி விழுக்காடு: 12511 வாக்குகள் (17.23%)

1977:
போட்டியிட்ட தொகுதி: அண்ணா நகர்
எதிர் போட்டியாளர்: ஜி. கிருஷ்ணமூர்த்தி [AIADMK]
வெற்றி விழுக்காடு: 16438 வாக்குகள் (19.12%)

1980:
போட்டியிட்ட தொகுதி: அண்ணா நகர்
எதிர் போட்டியாளர்: எச். வி. ஹண்டே [AIADMK]
வெற்றி விழுக்காடு: 699 வாக்குகள் (0.67%)

1984:
சட்டமன்ற தேர்தல்
போட்டியிடவில்லை

இதையும் படியுங்கள் | தமிழ் வெல்லும்!! ‘முத்துவேல் கருணாநிதி

1989:
போட்டியிட்ட தொகுதி: துறைமுகம்
எதிர் போட்டியாளர்: கே. எ. வகாப் [முஸ்லீம் லீக்]
வெற்றி விழுக்காடு: 31991 வாக்குகள் (45.92%) 

1991:
போட்டியிட்ட தொகுதி: துறைமுகம்
எதிர் போட்டியாளர்: கே. சுப்பு [காங்கிரஸ்]
வெற்றி விழுக்காடு: 890 வாக்குகள் (1.4%)

1996:
போட்டியிட்ட தொகுதி: சேப்பாக்கம்
எதிர் போட்டியாளர்: நெல்லை கண்ணன் [காங்கிரஸ்]
வெற்றி விழுக்காடு: 35784 வாக்குகள் (59.88%)

2001:
போட்டியிட்ட தொகுதி: சேப்பாக்கம்
எதிர் போட்டியாளர்: தாமோதரன் [காங்கிரஸ்]
வெற்றி விழுக்காடு: 4834 வாக்குகள் (8.41%)

2006:
போட்டியிட்ட தொகுதி: சேப்பாக்கம்
எதிர் போட்டியாளர்: தாவுத் மியாகான் [சுயேச்சை]
வெற்றி விழுக்காடு: 8522 வாக்குகள் (12.7%)

இதையும் படியுங்கள் | கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவின் அடையாளம் மு.க. ஸ்டாலின்

2011:
போட்டியிட்ட தொகுதி: திருவாரூர்
எதிர் போட்டியாளர்: எம்.இராசேந்திரன் [AIADMK]
வெற்றி விழுக்காடு: 50249 வாக்குகள் (29.02%)

2016:
போட்டியிட்ட தொகுதி: திருவாரூர்
எதிர் போட்டியாளர்: பன்னீர்செல்வம் [AIADMK]
வெற்றி விழுக்காடு: 68366 வாக்குகள் (34.74%)

Trending News