பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட நரிக்குறவர் குடும்பம், வலுக்கும் எதிர்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் குடும்பத்தை பேருந்திலிருந்து நடத்துனர் பாதிவழியில் இறக்கி விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 9, 2021, 07:45 PM IST
பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட நரிக்குறவர் குடும்பம், வலுக்கும் எதிர்ப்பு! title=

கன்னியாகுமாரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் குடும்பத்தை பேருந்திலிருந்து நடத்துனர் பாதிவழியில் இறக்கி விட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  முன்னர் மாமல்லபுரத்தில் நரிக்குறவ பெண்ணொருவரை கோவில் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தியதும், இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி குளச்சல் பகுதியில் மீன் விற்கும் மூதாட்டியை நடத்துனர் ஒருவர் பேருந்திலிருந்து பாதி வழியிலேயே இறக்கி விட்டது உள்ளிட்ட காரியங்கள் தொடர்ந்து பேருந்து நடத்துணரால் நடைபெற்று வருகிறது.  தொடர்ந்து இதுபோல சம்பவங்கள் பேருந்துகளில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ | Tirunelveli: கனிமவள கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த சப் கலெக்டர் & எஸ்.பி. இடமாற்றம்

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக மீனவ பெண்மணி ஒருவர் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிக்குறவர் குடும்பத்தை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.  நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகே திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வந்த பேருந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

kanyakumari

அப்பேருந்தில் வந்த ஒரு முதியவர், ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தை ஆகியோரை பேருந்திலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்ட காட்சி அங்குள்ளவர்களால் படம் பிடிக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  ஏன் எதற்காக இறக்கி விடப்பட்டார்கள்? என்ற முழுமையான விபரம் தெரியாத நிலையில் பேருந்தில் வந்த பெண்மணி சத்தமாக பேசியதற்காக இறக்கிவிடப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது. 

kanyakumari

எனினும் இப்படி வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இதுபோன்று பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி விடும் நடத்துனர்களுக்கு இனி வேலை கொடுக்கப்படாது அவர்கள் பணி நீக்கம் செய்ய படுவார்கள் என்று போக்குவரத்துத்துறை அறிவித்தால் மாத்திரமே இந்த மாதிரியான நிலை நடைபெறாது.  அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

ALSO READ | கண்ணீர்மல்க போராடிய மீனவ மூதாட்டி - அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News