NPR கல்விக்குழுமம் சார்பில் தேசிய அறிவியல் தின கண்காட்சி!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமம் சார்பில் தேசிய அறிவியல் தின கண்காட்சி நடத்தப்பட்டது!

Last Updated : Mar 1, 2019, 07:09 AM IST
NPR கல்விக்குழுமம் சார்பில் தேசிய அறிவியல் தின கண்காட்சி! title=

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமம் சார்பில் தேசிய அறிவியல் தின கண்காட்சி நடத்தப்பட்டது!

நடந்து முடிந்த தேசிய அறிவியல் தின கண்காட்சிக்கு கல்விக்குழும செயல் இயக்குனர் ஷியாம் உமாசங்கர் தலைமை ஏற்றார். பெறியியல் கல்லுாரி முதல்வர் மருதுக்கண்ணன், கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த கண்காட்சியில் பொறியியல் கல்லுாரி சார்பில் 27 படைப்புகளும், கலைக் கல்லுாரி சார்பில் 20 படைப்புகளும், பாலிடெக்னிக் சார்பில் 10 படைப்புகளும், கல்வியியல் கல்லுாரி சார்பில் 7 படைப்புகளும் இடம்பெற்றன. சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். 

அறிவியலை பாடமாக மட்டும் பார்க்காமல், அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடு குறித்து அறிய வேண்டும், அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூகத்திற்கு எதிராக இல்லாமல் பாதுகாப்பானதாக மட்டுமே இருக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சி நடத்தப்பட்டது. 

இந்த கண்காட்சியில் பாலிடெக்னிக் முதல்வர் ஆனந்த், கல்வியியல் கல்லுாரி முதல்வர் தாமரைச்செல்வி மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரும் பங்கேற்றனர். 

Trending News