தமிழகத்தில், அதிக மின்னழுத்தம் முன்னுரிமையில் அடிப்படையில் 25 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது!
விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டப்பேரவையில் நேற்றைய தினம் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் மாநிலம் முழுவதம் பல்வேறு இடங்களில் புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பது பற்றிய அறிவிப்பினை அவர் வெளியிட்டார்.
சுமார் 5068 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய, திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பகுதியில் அதிக மின் அழுத்தம் இருப்பதால், அங்கு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவிக்கையில்...
"அதிக மின்னழுத்தம் உள்ள இடங்களில் முன்னுரிமையின் அடிப்படையில், துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.