தமிழகத்தில் புத்தாண்டை ஒட்டி ரூ.211 கோடிக்கு மது விற்பனையானது இது கடந்த ஆண்டை விட ரூ.36 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் ரூ.211 கோடிக்கும் மேல் மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரூ.175 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இதனையடுத்து டிசம்பர் 31-ம் தேதி மற்றும் புத்தாண்டையொட்டி ரூ.200 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்தினர் திட்டமிட்டதாக கூறப்பட்டது.
கோலாகலமாக துவங்கியது இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி!
தமிழக நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்குள் உள்ள மதுபான கடைகள் கடந்த ஏப்ரல் மாதம் 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபானங்களின் விலையும் 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
கடந்த ஆண்டு மதுக்கடைகளை மூடியது. மதுவுக்கு எதிரான போராட்டம் காரணமாக ரூ.180 கோடி அளவில் விற்பனை ஆனது. இந்தாண்டு இது இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. மதுபானங்கள் விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த ஆண்டு மது விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் நிர்ணயித்த இலக்கை தாண்டி விற்பனை அதிகரித்துள்ளது.
டிசம்பர் 31-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் களைக்கட்ட தொடங்கிய மது விற்பனை நேரம் செல்ல செல்ல அதிகரித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் ரூ.211 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அது கடந்த ஆண்டை விட ரூ.36 கோடி அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31-ம் தேதி அன்று ரூ.117 கோடி அளவிலும் ஜனவரி 1-ம் தேதி அன்று ரூ.94 கோடி அளவிலும் மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.