சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கடற்படை அமைப்புகளின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளை "பறக்க அனுமதி இல்லாத பகுதி" (No Fly Zone) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தனிநபர்கள்/சிவில் ஏஜென்சிகள் எந்த முன் அனுமதியும் இல்லாமல் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV கள்) போன்ற பாரம்பரியமற்ற வான்வழி பொருட்கள், தமிழ்நாட்டில் உள்ள கடற்படை அமைப்புகளின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கையில், “ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aerial Vehicles) உள்ளிட்ட பாரம்பரியமற்ற வான்வழி பொருட்களை இந்திய கடற்படையின் முறையான ஒப்புதல் இல்லாமல் பறக்கக்கூடாது. மீறினால், அவை அழிக்கப்படும், அல்லது பறிமுதல் செய்யப்படும். மேலும், இந்த உத்தரவுகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட ஆபரேட்டர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிக்கப்படும்.
உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கியிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி எந்தவொரு ஆபரேட்டர்/அரசு நிறுவனத்தால் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் தரப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட பறக்கும் செயல்பாட்டின் போது, டைரக்டர் ஜெனரல் சிவில் ஏவியேஷன் (Director General Civil Aviation (DGCA)) யின் ஒப்புதல் பெறவேண்டும். இதற்கான ஒப்புதலை டிஜி ஸ்கை இணையதளம் (Digi Sky Website) மூலம் பெறப்பட வேண்டும்.
According to the defence establishment, the area falling under 3km radius from the perimeter of naval installations in Tamil Nadu has been designated as a 'No Fly Zone'
Report by: @sdhrthmphttps://t.co/c65VxdIBFO
— WION (@WIONews) August 18, 2021
இந்த ஒப்புதல் கடிதத்தின் நகல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதி தலைமை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த ஒப்புதல் கடிதத்தை, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட கடற்படை நிலையத்திடம் பறக்கும் நடவடிக்கைக்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே கொடுக்கவேண்டும்.
ஜூலை மாதத்தில், தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் உள்ள இந்திய கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் ராஜாளியின் சுற்றளவிலிருந்து 3 கிமீ சுற்றளவுக்குள் வரும் பகுதிகள் "பறக்க முடியாத பகுதி" என்று அறிவிக்கப்பட்டன. அதை மீறி இந்த தடை செய்யப்பட்ட பகுதியில், யுஏவி/ட்ரோன் பறந்தால் பறிமுதல் மற்றும் அழித்தல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதே போன்ற எச்சரிக்கை அப்போதும் விடப்பட்டது.
ஜம்மு -காஷ்மீரில் சமீபத்தில் வெடிபொருட்கள் நிறைந்த ட்ரோன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பு அமைப்புகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. மினி பறக்கும் இயந்திரங்கள், நாட்டின் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் அவை எங்கிருந்தும், குறுகிய அறிவிப்பில் இயக்கப்படலாம் என்பதோடு, உயிர் மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | Live-in relationship சட்டவிரோதமானது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR