தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை அரியலூரில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியும், தமிழக துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். இந்த விழா அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
அப்பொழுது முதல்வர் பேசுகையில், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அவரது காலத்தில் பல சதித்திட்டங்களை தோற்கடித்து வெற்றி பெற்றார். அதனால் தான் லட்சக்கணக்கான இதயங்களில் இன்னும் வாழ்கிறார். அதனால் யாரும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என முதல்வர் பழனிசாமி கூறினார்.
Amma had defeated many conspiracies during her time, that is why she lives in hearts of millions,so no one can make this Govt fall: TN CM pic.twitter.com/Nc1meQKW8r
— ANI (@ANI) August 23, 2017
Those who are leveling corruption allegations, we leave it to their conscience, they were also a part of us once: TN CM E Palaniswami
— ANI (@ANI) August 23, 2017