ஜெயலலிதா படத்துடன் கூடிய கொடியை தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயன்படுத்தகூடாது என தடைவிதிக்க கோரிய மனுவானது அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது!
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களை நினைவு கூறும் வகையில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’ அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று சிவகாசியில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’ நடைபெற உள்ளது!
இவ்விழாவினில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சிவகாசி நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
முன்னதாக சேலம், அரியலூர் மாவட்டங்களில் ‘எம்ஜிஆர் நூற்றாண்டு விழா’விமர்சையாக கொண்டாடப் பட்டது குறிப்பிடத்தக்கது!
நீட் தேர்விற்கு எதிராக சென்னையில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது பினாமிகளின் ஆர்ப்பாட்டம் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
இன்றைய எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் தனியார் உறைவிட பள்ளிகள், கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பினாமிகளின் போராட்டம்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டம்த்தினைப் பற்றியும், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இன்று நடைப்பெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சசிகலா உள்பட அவரது உறவுமுறைகள் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த செயலுக்கு பின்னால் பாஜக -வின் உந்துதல் இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையினில் தற்போது ஹெச்.ராஜா -வின் ட்விட்டர் பதிவு மேலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவினில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
குடும்ப அரசியல் ஆபத்தானது. அஇஅதிமுக மன்னார்குடி குடும்பத்திலிருந்து விடுபட்டு விட்டது. திமுக திருக்குவளை குடும்பத்திலிருந்து விடுபடுமா
சென்னை எக்மோரிலிருந்து சி.பா.ஆதித்தனார் திருவுருவச் சிலையை அகற்றப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து மு.க ஸ்டாலின் அவர் முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை எக்மோரிலிருந்த "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலையை அகற்றியுள்ள எடப்பாடி திரு. பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசிய அளித்தார் அப்போது,
அணிகள் இணைந்தாலும் சசிகலா தான் பொது செயலாளர். முதல்வர் தாமாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என்று தான் அவருக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்த ஆதாயத்திற்காகவும் கோரிக்கை விடுவிக்கவில்லை. துரோகம் செய்தது யாராக இருந்தாலும் அவர்களை கண்டிப்பாக விடமாட்டோம்.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை அரியலூரில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியும், தமிழக துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். இந்த விழா அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை அரியலூரில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியும், தமிழக துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர்.
இந்த விழா அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர். இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை அரியலூரில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியும், தமிழக துணை-முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்கின்றனர்.
இந்த விழா அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும்,ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைக்கின்றனர். பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வில் இரண்டு அணிகள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று சசிகலா அணி, மற்றொன்று ஓபிஎஸ் அணி. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். பிறகு தினகரன் தனிமைபடுத்தப்பட்டார்.
தற்போது அதிமுக தினகரன் அணி, ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என மூன்று அணிகளாக பிரிந்தன. தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினால் நாங்கள் அதிமுகவில் இணைவோம் என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில தினங்களாக பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளர்ர்.
இதைக்குறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், அரசு இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக திறம் பட பணியாற்றி வந்தார். உடல் நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். புரட்சி தலைவி அம்மா அவர்களின் இறப்பை குறித்து பல்வேறு செய்திகள் ஊடங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை 420 என குறிபிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற குடியரசு துணைதலைவர் பதவியேற்பு விழாவிற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.
தன்னை 420 என்று டிடிவி தினகரன் கூறியது அவருக்கே பொருந்தும் என தெரிவித்தார், மேலும் அணிகள் இணைப்பு குறித்து கேட்டதற்கு, அ.தி.மு.க. பொது செயலளராக சசிகலா மற்றும் தினகரன் கழக பதவியில் இருப்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொல்லவில்லை எனவும், தொண்டர்கள் விரும்பும் முடிவு விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து பல பரபரப்பான தகவல்கள் வெளி வந்துகொண்டிருக்கும் இந்நிலையில், அ.தி.மு.க. அம்மா அணி துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-
அ.தி.மு.க. வின் இந்த பரபரப்பிற்காக சுழலுக்கு என்னால் பொறுபேற்க முடியாது. எதிர்கால இயக்க வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை நான் துணிச்சலுடன் மேற் கொள்வேன். ஆனால் அச்செயல்கள் எப்போது தேவைப்படுமோ அப்போது தானாக நடக்கும். கட்சியின் வளர்ச்சிக்காக எந்த ஒரு நடவடிக்கையும் நான் எடுக்க தயங்க வேண்டிய அவசியம் இல்லை.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லியில் இன்று சந்தித்துப் பேச வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது இரு அணிகளையும் இணைப்பது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக தினம் ஒரு பரபரப்பு செய்தியினை மக்களுக்கு அளித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று காலை பிரிந்துள்ள அதிமுக-வின் இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்து பேசுவதற்காக அதிமுக தலைமையகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்து இருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.