வெளிநாட்டு நிதி மோசடி தொடர்பாக, டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கும், கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா வழியில் அமைச்சர்கள் செல்லவில்லை என்றால் ஆபத்து நிச்சயமாக நேரும். கட்சியை கொல்லப்புறமாக கைப்பற்றும் முயற்சியில் சில அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளார்கள். மக்களுக்கு திருடர்கள் யார் என்பது தெள்ளத் தெளிவாக தெரியும்.
ஓபிஎஸ் காலில் விழுந்து ஒன்று சேரத் துடிப்பதாகவும், வழிமாறி செல்பவர்கள் திருத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். நடிகர் கமல்ஹாசன் கேள்விக்கு முதல் அமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும் என்று தினகரன் கூறினார்.