அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் மழை பெய்யும்..!!!

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குரிச்சி, சேலம், காஞ்சீபுரம், மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில்  குறைவான அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 19, 2020, 11:49 AM IST
  • திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குரிச்சி, சேலம், காஞ்சீபுரம், மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் குறைவான அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
  • அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
  • அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி யாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாகவும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் மழை பெய்யும்..!!! title=

கடந்த சில நாட்களாக வட தமிழகத்தில் உள்ள பல பல பகுதிகளில் தொடர்ந்து  மழை பெய்து வருகிறது.  வடமேற்கில் உருவாகி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சென்னை: வடக்கு தமிழ்நாடு கரையோர பகுதியில்,  வங்காள விரிகுடாவில் 7.6 கி.மீ தூரத்தில் புயல் உருவாகியுள்ளது. செப்டம்பர் 20 ஆம் தேதி வடகிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்டை பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது ”என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

சென்னையில், நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் முறையே  33.6 மற்றும் 33.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27.7 மற்றும் 26.6 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குரிச்சி, சேலம், காஞ்சீபுரம், மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில்  குறைவான அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. 

ALSO READ | DoTE-யில் தாமதமாகும் பொறியியல் மாணவர் சேர்க்கை.. அவதிப்படும் மாணவர்கள்..!!!

கேரளா மற்றும் மேற்கு கடற்கரையில் மீண்டும் பருவமழை பெய்யும் அதே வேளையில், அடுத்த இரண்டு நாட்கள் வட தமிழகத்திலும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்,  வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு சேலம், நமக்கல், தரம்புரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் நல்ல அம்ழை பெய்யும் ”என்று தமிழ்நாடு  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி யாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாகவும் இருக்கும். செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கரையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன்: நடிகர் சூர்யா

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News