குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை- எம்.பி ஜோதிமணி வேதனை

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என கரூர் எம்.பி ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Edited by - Vijaya Lakshmi | Last Updated : Nov 20, 2021, 05:02 PM IST
குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை- எம்.பி ஜோதிமணி வேதனை title=

பாலியல் துன்புறுத்தலால் மன உளைச்சலில் இருந்த கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் சூழலில், கரூரைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலால் (sexual harassment) தற்கொலை செய்து கொண்டிருப்பது தமிழகம் (Tamil Nadu) முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில், கரூர் மாணவி தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எம்.பி ஜோதிமணி, குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவில்லை என வேதனையைத் தெரிவித்துள்ளார். 

ALSO READ |  சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது

 

 

இது தொடர்பாக அவர் டிவிட்டரில் எழுதியுள்ள பதிவில், " கரூர் மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சயளிக்கிறது. நம் குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகளை எதிர்க்கவும், அச்சமின்றி குற்றவாளிகளை பொதுவெளியில் அடையாளம் காட்டவும் முடியாமல் தற்கொலையை நாடுவது வேதனையை அளிக்கிறது. சமூகமாகவும், சட்டப்படியும் நாம் நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என்பது கசப்பான உண்மை" என வேதனையுடன் கூறியுள்ளார். 

" குற்றவாளிகள் தலைநிமிர்ந்து நடக்கும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சப்பட்டு தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெறுகிறது. ஒரு குழந்தை தற்கொலையை தேர்ந்தெடுக்கிறது என்றால், வாழ்வு எப்படி அதற்கு தாங்க முடியாமல், வலிகள் நிறைந்ததாக இருந்திருக்கும்? என்று நினைக்கும்போதே நெஞ்சு பதறுகிறது. தந்தையாகவும் இருந்து வளர்த்தெடுத்த அந்த தாய்க்கு இந்த மகத்தான இழப்பை ஈடுசெய்யும் வார்த்தைகளை யாராலும் சொல்ல முடியாது. அந்த தாய்க்கு என் அன்பும், அரவணைப்பும் " என மன வேதனையுடன் எம்.பி ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசியுள்ளதாக தெரிவித்துள்ள ஜோதிமணி, 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக கூறியுள்ளார். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளதாகவும் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார். 

ALSO READ |  பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News