Seeman Latest News Updates: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இருப்பினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
ஆனாலும் நாதகவினர் திட்டமிட்டபடி இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு ஆர்ப்பாட்டத்திற்கு குவிந்த ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது அங்கு காரில் வந்த சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்தார்.
231 பேர் மீது வழக்குப்பதிவு
அப்போது அவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் தள்ளுமுள்ளுவின் போதே சீமான் செய்தியாளர்களை சந்தக்க முற்பட்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம் எதற்கு போராட வந்து இருக்கிறேன் என்று கூட சொல்ல விட மறுக்கின்றனர் என அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். இதை தொடர்ந்து, வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சீமான் உள்பட 231 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 2026இல் மீண்டும் விடியலா... திமுக போடும் மெகா பிளான் - யார் இந்த ராபின் சர்மா?
இவர்களை பெரியமேடு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் போலீசாரால் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் இன்று மாலையில் சீமான் மற்றும் நாதகவினர் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசியதாவது,"இதற்கு முன், வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி இருக்கிறோம். ஆனால், இன்று போக்குவரத்துக்கு நெரிசல் ஆகிவிடும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. இன்று காலை ஊடகத்தில் கூட பேச அனுமதி அளிக்காதது ஏற்புடையதாக இல்லை" என்றார்.
ஆளுநரை சந்தித்து என்ன ஆகப்போகிறது...
மேலும் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து பேசிய அவர்,"அங்கு படிக்கும் பெண்ணை மிரட்டி விடலாம் என்ற துணிவு அவருக்கு (ஞானசேகரனுக்கு) எங்கிருந்து வருகிறது. ஒரு பின்புலம் இல்லாமல் எப்படி அந்த துணிவு வருகிறது. அச்சப்பட்டு மறைக்கப்பட்ட குற்றங்கள் எத்தனை? இது எத்தகைய அணுகுமுறை? இது மிகவும் கொடுமையானது" என்றார்.
நடிகர் விஜய் ஆளுநரை சந்தித்ததை போல் நீங்கள் ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைக்கவில்லையா என்ற கேள்விக்கு,"ஆளுநருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஆளுநரை சந்தித்து என்ன ஆகப்போகிறது? குற்றத்தில் ஈடுபட்டவர் ஒரு நபர் தானா? என்ன துணிவில் இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டார்? இந்த ஒரு முதல் தகவல் அறிக்கை மட்டும் எப்படி லீக்கானது? குற்றச்செயல் நடக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேரமாக்கள் ஏன் இயங்குவதில்லை?. இது எப்படி நாடகமாகும்? குற்றவாளியின் வாக்குமூலம் என்ன? நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது எத்தனை போராட்டங்களை நடத்தினீர்கள்? நல்லாட்சி என நீங்களே பேசி வருகின்றனர். மக்களை சொல்லச் சொல்லுங்கள். யாரும் கேள்வி கேட்கக்கூடாதா?" என தொடர்ந்து கேள்விகளை அடுக்கினார்.
வருண்குமார் ஐபிஎஸ் விவகராம்
தொடர்ந்து நேற்று வருண்குமார் ஐபிஎஸ், சீமான் தொழிலதிபர் ஒருவர் மூலம் தன்னிடம் சமாதானம் பேச முயற்சித்தார் என்றும் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் கேட்கட்டும் என பேசியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு சீமான்,"ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரிடம் நான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். நான் அவருக்கு பயந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமா? வருண் குமார் நேருக்கு நேர் நின்று என்னுடன் பேச தயாரா? நாகரிகம் கருதி சில அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பெயர்களை கூற விரும்பவில்லை. அவர்களை வைத்து பிரச்சினை வேண்டாம், அனைத்தையும் முடித்துவைக்கும்படி என்னிடம் அனுப்பி வைத்தவர் வருண்குமார்.
நான் எதற்காக பேச வேண்டும் என அங்கிருந்து நான் எழுந்து சென்றிருக்கிறேன். துப்பாக்கி, பட்டாலியன் எல்லாம் வைத்துக் கொண்டு வருண்குமார் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறுவது கேவலமாக இல்லையா? தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக்கொள்ள அவர் நினைத்து என்னிடம் மோதுகிறார். அவர் சரியான ஆண்மகன் என்றால் எனக்கு தண்டனைப் பெற்றுத் தரட்டும்.
வருண்குமாருக்கு எதற்கு டிஜிபி பதவி?
காக்கிச் சட்டைக்குள் மறைந்திருக்கும் குற்றவாளிதான் அவர். அவர் செல்போன், ஆடியோ திருடன். நாம் தமிழர் கட்சியினரின் 14 செல்போன்களை திருடியவர் அவர். அந்த செல்போன்களில் இருந்த ஆடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை வெளியிட்டது வருண்குமாரா? இல்லையா? என சொல்லுங்கள், நேர்மையானவராக இருந்தால் பதில் கூறட்டும்.
தமிழ்நாடு அரசு என்னோடு மோத வழியில்லாமல், வருண்குமாரை முன்னிறுத்தி ஆட்டம் காட்டுகிறது. எதற்காக வருண்குமாருக்கு டிஜிபி பதவி உயர்வு. அதுவும், கணவன் மனைவி இருவருக்கும் ஹனிமூன் சுற்றுலா போல, திண்டுக்கல் - திருச்சியில் பணி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அனைவருக்கும் பணியிடமாறுதல் வழங்கி உள்ளது. வருண்குமாரை மட்டும் அதே இடத்தில் பணியமர்த்தி இருக்கிறது" என குற்றஞ்சாட்டி உள்ளார்.
மேலும் படிக்க | சென்னை புத்தக கண்காட்சி: அலைமோதும் கூட்டம்... அப்படி என்ன ஸ்பெஷல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ