திருத்தணி கோவிலில் ஆன்லைன் டிக்கெட் சேவை மீண்டும் துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் 'ஆன்-லைன்' மூலம் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் மற்றும் தேவஸ்தான குடில்கள் முன்பதிவு துவங்கப்படுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 5, 2022, 11:52 AM IST
  • திருத்தணி கோவிலில் மீண்டும் ஆன்லைன்முன்பதிவு
  • இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் கொண்டு வரப்படும்
  • தேவஸ்தான விடுதிகள் ஆன்லைன் முன்பதிவு விபரம்
திருத்தணி கோவிலில் ஆன்லைன் டிக்கெட் சேவை மீண்டும் துவக்கம் title=

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். இங்கு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பக்தர்கள் வசதிக்காக மூலவருக்கு நடத்தப்படும் சிறப்பு அபிஷேகம், வெள்ளித்தேர், கேடய உற்சவம் உட்பட பல்வேறு சேவைகளுக்கு பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை வெளியிடப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டது.

பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு மூலவரை விரைவு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில், 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் ஆன்லைன் வாயிலாக பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த வசதிக்கு முன், மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருந்தது.

மேலும் படிக்க | திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு: பலர் காயம்

இதற்கிடையில் கடந்த 2020 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் ஆன்லைன் சேவா டிக்கெட்டுகள், அபிஷேகம், சந்தன காப்பு போன்ற டிக்கெட்டுகள் நிறுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் மீண்டும் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் பெறுவதற்கு மலைக்கோவிலுக்கு நேரில் வந்து பணம் கொடுத்து முன்பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் பக்தர்கள் நலன் கருதி இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் மற்றும் தேவஸ்தான குடில்கள் முன்பதிவு துவங்கப்படுகிறது. இந்த நடைமுறை இம்மாதம் 15 ஆம் தேதிக்குள் கொண்டு வரப்படும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட், சேவா டிக்கெட், பஞ்சாமிர்தம் அபிஷேகம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்வதற்கு www.tnhrce.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று சேவா டிக்கெட், அபிஷேகம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேவஸ்தான விடுதிகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தேவஸ்தான விடுதிகள் ஆன்லைன் முன்பதிவு விபரம்:

குளிர்சாதன குடில் 1,500
சாதாரண குடில் 800
சிங்கள் அறை 900

முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் சேவைகள் விபரம்:

பாலாபிஷேகம் 200, சந்தனகாப்பு 4,000
வெள்ளித்தேர் 3,500
வெள்ளி மயில் வாகனம் 3,500
கல்யாண உற்சவம் 2,000
தங்கத்தேர் 2,000
பஞ்சாமிர்த அபிஷேகம் 1,500
கேடய உற்சவம் 1,000
தங்க கவசம் 500
சகஸ்ரநாம அர்ச்சனை 400

மேலும் படிக்க | வேலூரில் இருந்து திருப்பதிக்கு இலவச பயணம்; பயன்பெறுவது எப்படி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News