வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க EPS-க்கு அழைப்பு!

குஜராத்தில் அமைக்கப்படும் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 15, 2018, 03:17 PM IST
வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க EPS-க்கு அழைப்பு! title=

குஜராத்தில் அமைக்கப்படும் பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

இந்தியாவின் இரும்பு மனிதர் என புகழப்படும் விடுதலைப் போராட்ட வீரர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களை பெருமைப் படுத்தும் விதமாக குஜராத் நர்மதை ஆற்றின் நடுவே உள்ள தீவில் 182 மீட்டர் உயர பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய சிலையாக சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலையை குஜராத்தில் அமைக்கப் போவதாக பிரதமர் மோடி முன்னதாக அறிவித்திருந்தார். இதன்படி, பட்டேலின் 143-வது பிறந்த தினமான அக்டோபர் 31-ஆம் நாள் நர்மதா நதிக்கரையில் அவரது சிலையை நிறுவி, திறந்து வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். 

இந்நிகைழ்ச்சியில் பங்கேற்க வருமாறு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, குஜராத் சுற்றுலாத் துறை அமைச்சர் கண்பத்சிங் வத்சவா மற்றும் அதிகாரிகள் அழைப்பிதழ் கொடுத்தனர்.

Trending News