WATCH: வெள்ளபெருக்கால் இரண்டாக உடைந்த கொள்ளிடம் பாலம்....

கொள்ளிடம் பழைய பாலம் நேற்று இரவு இரண்டாக இடிந்து விழுந்தது. 

Last Updated : Aug 19, 2018, 10:26 AM IST
WATCH: வெள்ளபெருக்கால் இரண்டாக உடைந்த கொள்ளிடம் பாலம்.... title=

மேட்டூரிலிருந்து 2.05 லட்சம் கன அடி நீர் திறப்பு: கொள்ளிடம் பழைய பாலம் நேற்று இரவு இரண்டாக இடிந்து விழுந்தது. 

கர்நாடகாவில் பெய்து வரும்  கனமழை காரணமாகக் காவிரியில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீரானது மேட்டூர் அணையில் இருந்து முக்கொம்பு மேலணை வழியாகக் கல்லணைக்கு திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றில் 60 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால்  கொள்ளிடம் பழைய பாலத்தின் 18 மற்றும் 20 வது தூண்களில் விரிசல் அதிகரித்தது. 

இதனையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொள்ளிடம் பழைய பாலத்தில் போக்குவரத்தைத் தடை செய்தனர். இந்நிலையில் தற்போது இந்த பாலத்தின் தூண்கள் இடிந்து விழுந்தன. இந்தப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால் பெரியளவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1924-ம் ஆண்டு, ஸ்ரீரங்கத்தையும், நெ.1 டோல்கேட் பகுதியையும் இணைக்கும் வகையில் இரும்புப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்தப்பாலம் மிகவும் பலவீனம் ஆகிவிட்டதால், கொள்ளிடத்தில் புதுப்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பழைய இரும்புப் பாலத்தின் மீது குறைந்த எடைகொண்ட வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்பட்டன. 

பாலத்தின் 18 மற்றும் 20 வது தூண்களில் விரிசல் அதிகரித்ததையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பழைய பாலத்தில் போக்குவரத்தைத் தடை செய்தனர். இதன்காரணமாக தற்போது பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

Trending News