சர்வதேச பாரதி விழாவில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

இன்று, பிரதமர் நரேந்திர மோடி 2020 சர்வதேச பாரதி விழாவில், வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றவுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2020, 01:51 PM IST
  • சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுவார்.
  • இந்த ஆண்டு திருவிழா மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • சமூகம் சார்ந்த துறைகளில் பாராட்டத்தக்க சேவையைச் செய்தவர்களுக்கு விருது.
சர்வதேச பாரதி விழாவில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி title=

புதுடில்லி: இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள். நாட்டிற்காகவும், மக்களுக்காகவும், சமூகத்துக்காகவும், மொழிக்காகவும், தன் வாழ்நாளை தியாகம் செய்தவர் முண்டாசுக் கவிஞன் பாரதி.

இன்று, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 2020 சர்வதேச பாரதி விழாவில், வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றவுள்ளார்.

“2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சர்வதேச பாரதி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மாலை 04:30 மணிக்கு உரையாற்றுவார். இந்த ஆண்டு திருவிழா மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச கவிஞர்கள் மற்றும் கலைஞர்களின் பங்கேற்பு இந்த விழாவில் இருக்கும்” என்று பிரதமர் அலுவலகம் (PMO) வியாழக்கிழமை கூறியது.

தமிழ் கவிஞரும், எழுத்தாளரும், விடுதலை போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான மகாகவி சுப்பிரமண்ய பாரதியின் (Subramaniya Bharati) 139 வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த விழாவை வானவில் கலாச்சார மையம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் தமிழக உத்தியோகபூர்வ மொழி மற்றும் தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கே.பண்டியராஜன் உரையாற்றுவார் என்று கே.ரவி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது சமூகம் சார்ந்த துறைகளில் பாராட்டத்தக்க சேவையைச் செய்த சிறந்த நபர்களுக்கு வழங்கப்படுகிறது.

சுதந்திர போராட்டம் (Freedom Struggle) உச்சியில் இருந்த காலத்தில், தன் பாடல்கள் மூலம் மக்கள் மனங்களில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் பாரதி. சிறையில் அடிபட்டு, செக்கிழுத்து, நோவுற்று பெற்ற சுதந்திர போராட்டத்தின் வலி அவரது பாடல்களில் காணக் கிடைக்கும்.

ALSO READ: பாரதியார் பிறந்தநாள்: சமுதாய சீர்திருத்தத்தின் சாரதி, தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை பாரதி

தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை, தமிழ் மொழியின் பொக்கிஷம், சாமானிய மனிதனிடம் சுதந்திரச் சுடரை ஏற்றிய அகல் விளக்கு, பெண் விடுதலைக்காக போராடிய துணிச்சலான ஆண்மகன், காக்கை, குருவி என அனைவரையும் சமமாக பாவித்த சமத்துவவாதி, நிறம் பார்க்காதே குணம் பார் என போதித்த ஞானி…..இப்படி பல, பல. ஒரு மனிதனுக்குள் இத்தனை மனிதர்களா என வியக்க வைத்த பாரதிக்கு அவர் வாழ்நாளில் கிடைத்தது என்னவோ அவமானங்களும் வசைகளும்தான்.

ஆனால், அவமானங்கள் என்றும் பாரதியை அசைத்துப் பார்ததில்லை. தன் நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்துக்கும் சரி என தோன்றிய அனைத்தையும் அவர் செய்தார். இப்படிப்பட்ட விழாக்கள் மூலம் அவரை நாம் நினைவுகூர்ந்து அவர் சொல்லிச் சென்ற அறிவுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

ALSO READ: பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News