ஏரியாவுக்கு வரச்சொல்லுங்கள் - அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜு

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை முதலில் அவரது ஏரியாவுக்குள் வரச்சொல்லுங்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 8, 2022, 08:13 PM IST
  • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்
  • அப்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்தார்
  • ஏரியாவுக்கு வரச்சொல்லுங்கள் எனவும் கோரிக்கை
ஏரியாவுக்கு வரச்சொல்லுங்கள் - அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜு title=

மதுரை  அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் கோபதாபத்தில் ஏதாவது பேசுவார்கள். அவர்கள் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுதான் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது என்கிறார்கள். எந்த வகையில் வழிகாட்டுகிறது என்பதை திமுக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

PTR

நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது துறையையே ஆய்வு செய்வதில்லை. முதலில் ஏரியாவுக்குள் அவரை வர சொல்லுங்கள். தொகுதி மக்களை சந்திக்க சொல்லுங்கள். அதை செய்யாமல் அவர் எங்களை தொலைநோக்கு பார்வையில்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக குறை கூறுகிறார். அவரை பற்றி திமுகவினரே வருத்தப்படுகிறார்கள். நிதி அமைச்சர் கமிஷனுக்காக தெருவிளக்கு போட விடமாட்டேன் என்பதாக சொல்கிறார்கள். அதனாலேயே தெரு விளக்கு பராமரிப்பை டெண்டர் நிறுத்தி வைத்துள்ளதாக அவரது கட்சியினரே வருத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | பொறியியல் கலந்தாய்வு தேதி மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுக்க முழுக்க அவரது தொகுதியில்தான் நடந்துள்ளது. நான்கு மாசி வீதிகளை உலகத்தரத்தில் சீரமைத்துளோம். கழிவுநீர், குடிநீர், மழைநீர் கால்வாய்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டமைப்புகளை அவர்கள் மேலும் வலுப்படுத்தியிருக்க வேண்டும். பராமரித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை சரியாக செய்யாததாலே தற்போது மழைநீர் தேங்குகிறது” என்றார்.

மேலும் படிக்க | பாஜக உறுப்பினர் அட்டையில் தமிழிசை கையெழுத்து... அப்போ அண்ணாமலை நிலைமை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News