சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு ஆணுறுப்பில் ஏற்பட்ட அரிப்புக்காக கடந்த மே 21-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தோல் நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சில நாட்களிலேயே சிறுவனுக்கு கடுமையான வலி மற்றும் அலர்ஜி ஏற்பட்டதால், பெற்றோர் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது, ஒருவர் மற்றொரு மருத்துவரை சுட்டிக்காட்டியதாகவும், பின்னர் பெற்றோர் அலைக்கழிக்கப்பட்டதுடன் மிரட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிரைக் காப்பாற்றும் நோக்கில் அவரது ஆணுறுப்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையில் அதிகார மோதல் தொடங்கிவிட்டதா? எதிர் எதிரே நிற்கும் கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாக்கூர்,
Sivaganga News : சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், காவல் துறையினர் மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் காவலருக்கு நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sivaganga District Latest News: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 25 லட்ச ரூபாய் வரை கடன்கள் வழங்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கடனை யாரெல்லாம் எப்படி பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் காரையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் அஸ்வின், அருகிலுள்ள திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தவர். பள்ளி திறந்த நாளில் பள்ளிக்கு சென்றதாக கூறப்பட்ட அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கீழக்காவனூர் கண்மாய் பகுதியில் மாணவன் சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், சிறுவனுக்கு 24 வயது அரவிந்த் , 22 வயது கணேசன் மற்றும் அஜய் ஆகியோருடன் மஞ்சுவிரட்டு நிகழ்வுகள் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. பின்னர் நண்பர்கள் நால்வரும் பள்ளி விடுமுறை நாளில் கண்மாய் பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அரவிந்த் மற்றும் கணேசன் இணைந்து கூர்மையான ஆயுதத்தால் சிறுவனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Manamadurai Election Result 2026: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை (தனி) (Manamadurai) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் இளங்கோவன் வெற்றிபெற்றார்.
Sivaganga Election Result 2026: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை (Sivaganga) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் குழந்தை ராணி வெற்றி பெற்றார்.
Tiruppattur Election Result 2026: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் (Tiruppattur) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பெரியகருப்பன் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியடைந்தார். தவெக - 83,375 வாக்குகளையும்; திமுக - 83,374 வாக்குகளையும் பெற்றது.
Karaikudi Election Result 2026: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி (Karaikudi) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பிரபு பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
சிவகங்கையில், ஐந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 5 மரண தண்டனைகளை தீர்ப்பு வழங்கி, நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இறுதி வாக்காளர் விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தொகுப்பில் திருப்பத்தூர், கடலூர், சிவகங்கை மாவட்ட வாக்காளர் விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
துப்புரவு பணியாளர்களுக்கு விசிலுக்கு தடை விதித்த திமுக கவுன்சிலர்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 21 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்துக்கு செல்ல உள்ளார்
சிவகங்கை அருகே முன் விரோதம் காரணமாக அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
Sivaganga Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் பாரம்பரியத்தை கார்த்தி சிதம்பரம் தக்கவைப்பாரா அல்லது ஏதேனும் மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் காணலாம்.
Sivaganga Lok Sabha Constituency Prediction 2024: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
Tamil Nadu: கலைத்திருவிழாவில் பங்கேற்று இரண்டாம் பரிசு வென்று சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவியர்களுக்கு பொது மக்கள் சார்பில் உற்ச்சாக வரவேற்பு.
Sivagangai: விலை உயர்ந்த சைக்கிளை திருடும் 60 வயது திருடனால் சிவகங்கையில் பதற்றம். காவல்துறை பீட் கேமராவில் கைதான பரபரப்பு சைக்கிள் திருட்டு!!
தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பங்குத்தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Aadi Friday 2022: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக 500 கிலோ பச்சை மஞ்சள் அம்மியில் அரைத்த பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 82 வயதான முத்து என்பவர் தனது வளர்ப்பு நாயின் நினைவாக கோவில் கட்டியுள்ளார்.
Viral Video: தமிழகத்தைச் சேர்ந்த 82 வயதான முத்து என்பவர் தனது வளர்ப்பு நாயின் நினைவாக கோவில் கட்டியுள்ளார்.