பொங்கல் பானைகள் விற்கப்படாமல் தேக்கம்: கலக்கத்தில் தொழிலாளிகள்

நத்தம் அருகே பாறை பட்டியில் தயாராகும் பொங்கல் பானைகள் தேக்கம் அடைந்துள்ளதால் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 12, 2022, 03:44 PM IST
பொங்கல் பானைகள் விற்கப்படாமல் தேக்கம்: கலக்கத்தில் தொழிலாளிகள் title=

நத்தம் அருகே பாறை பட்டியில் தயாராகும் பொங்கல் பானைகள் தேக்கம் அடைந்துள்ளதால் தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இவற்றை ரேஷன் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. புத்தரிசியிட்டு பொங்கல் பண்டிகை கொண்டாட முக்கிய அங்கம் வகிப்பது மண்பானை. 

வளர்ந்து வரும் நகர வாழ்க்கையில் சென்னை (Chennai), கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் பலரும் பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட பாத்திரங்களை கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். இருப்பினும் மண்பானையை விரும்பி வாங்கி அதில் பொங்கல் வைத்து மகிழும் பலரும் இன்னும் உள்ளனர். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே இருப்பதால் திண்டுக்கல்மாவட்டம் நத்தம் அருகே பாறைபட்டியில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழில் செய்து வரும் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயார்செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ | பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் வசதி!

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற பின் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் உற்சாகமாக வேலையை தொடங்கிய மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானைகள் தயார் செய்ய தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டங்களை வாங்க பொள்ளாச்சி திருப்பூர் கோயம்புத்தூர் திருச்சி சென்னை ஈரோடு பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆண்டுதோறும் வருவார்கள், மண்பானைகள் 40 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு வருடங்களாக கொரனோ தாக்கத்தினால் மண்பானை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு (Pongal Festival) மண்பானைகள் அதிகம் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக மண்பாண்ட ஆர்டர்கள் ரத்தாகி உள்ளதால் பொங்கல் தொகுப்பாக அரசு கரும்பு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்து நியாய விலைக்கடைகளில் வழங்குவது போல் பொங்கல் பானையையும் ரேஷன் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்பாண்ட வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சேலம் அருகில் உள்ள பொங்கல் பானை தயாரிக்கும் தொழிலாளிகளும் ஊரடங்கு மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையல் செய்வதற்கு மண்பானைகளுக்கு மாற்றாக குக்கர் மற்றும் நவீன சில்வர் பாத்திரங்களை பயன் படுத்துவதால் பொதுமக்களிடம் மண்பானைகள் வாங்கும் ஆர்வம் குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடி, மற்றும் வாழப்பாடி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மண் பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானைகள் தயாரிப்பதும், கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் தயாரிப்பதும் குலத்தொழிலாளாக செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி முல்லைவாடி பகுதியில் ஏராளமான பெண்கள் மண் பானைகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகையொட்டி தயாரிக்கப்படும் மண் பானைகளுக்கு வெளி மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் இங்கு தயாரிக்கப்படும் மண் பானைகள் தரமானதாகவும், பல்வேறு வடிவமைப்பில் அழகாக இருப்பதாகவும் இதனை வாங்கி செல்ல வெளி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்து வாங்கி செல்வார்கள் . 

சிறிய ரக மண் பானைகள் முதல் பெரியரக மண் பானைகள் வரை தயாரிக்கும் பணியில்  தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மண் பானைகள் தயாரிக்க பயன் படுத்தப்படும் ஏரி மண் தற்போது கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையால் ஏரிகள் நிரம்பி மண் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளி மாவட்டங்களுக்கு சென்று ஒரு வண்டி மண்ணை  700 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி வந்து மண் பானைகள் தயாரிக்கப் படுவதாகவும் தற்போது மண் பானைகளுக்கானபோதிய விலை கிடைக்காததால் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளதாக கூறுகிறார்கள் தொழிலாளர்கள். கடந்த ஆண்டு 30 ரூபாய் முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட மண் பானைகள் தற்போது 10 ரூபாய்முதல் 70 ரூபாய் வரை வியாபாரிகள் கேட்பதாகவும் , மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், தமிழகத்தின் பல இடங்களில் பொங்கல் வர்த்தகம் களைகட்டத் தொடங்கியுள்ளது. 

மூன்று மணிநேரத்தில் 3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று வாரச் சந்தை நடப்பது வழக்கம். வழக்கமாக சந்தையில் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெறும் நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற  ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.

காலை ஏழு மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டு சந்தையில் திண்டுக்கல் மதுரை திருச்சி சேலம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்துள்ளனர். 8000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று மணி நேரத்தில் 3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | Pongal 2022: முகூர்த்த காலுடன் தொடங்கியதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News