பிரியங்கா காந்தியை சந்தித்த நிமிடங்கள்- நளினியின் சுயசரிதையில்

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி எழுதிய சுயசரிதை புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீபெரம்பூரில் கடந்த 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்.

Last Updated : Nov 25, 2016, 02:25 PM IST
பிரியங்கா காந்தியை சந்தித்த நிமிடங்கள்- நளினியின் சுயசரிதையில் title=

சென்னை: ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி எழுதிய சுயசரிதை புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீபெரம்பூரில் கடந்த 1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் கொலை வழக்கில் 25 வருடங்களுக்கும் மேல் சிறையில் இருக்கும் நளினி எழுதிய "ராஜீவ் கொலை"யில் மறைக்கப்பட உண்மைகளும், பிரியங்கா சந்திப்பும்’என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம், சென்னையில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிடப்பட்டது. இந்நிலையில், ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை நேரில் சந்தித்தது பற்றி நளினி அந்த புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிரியங்கா காந்திக்கும், நளினிக்கும் இடையே நடைபெற்ற சிறப்பு சந்திப்பு பற்றியும் எழுதப்பட்டதாக, தெரிகிறது. அந்த சந்திப்பின்போது, ஒரு நல்ல மனிதரான தனது தந்தையை கொன்றது ஏன் எனப் பலமுறை பிரியங்கா காந்தி, நளினியிடம் கேட்டுள்ளார். அதற்குக் கூறிய பதில் என்ன என்பதை பற்றியும் நளினி, சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்  கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற தலைப்பில் 500 பக்கத்தில் நளினி புத்தகம் வெளியிட்டுள்ளார். விடுதலை புலிகளோடு இருந்தாலும் ராஜீவ்காந்தி கொலை சதி பற்றி எதுவும் தெரியாது என்றும், புலிகள் இயக்கத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, 25 ஆண்டுகளாக சிறைவாசம் செய்வது, அவ்வப்போது தனது மகளுக்கு எழுதும் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவரங்களை நளினி கூறியுள்ளார். 

ராஜீவ் காந்தி மகள் பிரியங்கா வேலூர் சிறையில் என்னை சந்தித்து 85 நிமிடங்கள் பேசியதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நலமா என்று கேட்டுவிட்டு என் தந்தையை ஏன் கொன்றீரர்கள் என்று பிரியங்கா கதறி அழுதார் என்றும் நளினி எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

நளினி வேலூர் மத்திய சிறையில் உள்ளதால், அவர் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

Trending News