கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் மாபெரும் வெள்ளம் ஏற்பட்டது.
அப்போது வெள்ளத்தினால் மின்சார துண்டிப்பு, உணவு பற்றாக்குறை என பல திசைகளில் மக்கள் அவதியுற்றனர்.
மழை நீர் செல்லும் வடிகால்கள் சரியான பராமரிப்பில் இருந்திருந்தால் அப்படியோரு வெள்ளம் சென்னையில் ஏற்பட்டிருக்காது என பரவலான கருத்து நிலவியது.
மேலும் 2015 சென்னை வெள்ளத்திற்கு காரணம் இந்த மழைநீர் வடிகால் அடைப்புப் பிரச்சனை தான் எனவும் நம்பப்பட்டது.
இதையடுத்து வெள்ளத்திற்குப் பிறகு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு புணர்ரமைக்கப்பட்டன.
அவ்வாறாக சென்னையிலுள்ள மொத்தம் 2071 கிலோ மீட்டர் நீளமுள்ள 8835 மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறி வெள்ளங்கள் வராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், சில குடியிருப்புகளும், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களது கழிவுநீரை வெளியேற்ற மழைநீர் வடிகால்களைப் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இந்த பயன்பாடு மூலம் மழைநீர் வடிகால்களில் மீண்டும் அடைப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, மழைநீர் வடிகால்கள் வழியாக கழிவுநீரை வெளியேற்றக் கூடாது என அறிவித்தது. மேலும், இதனை மீறி கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகளுக்கு 5,000 ரூபாயும், நிறுவனங்களுக்கு 25,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இது போன்ற புகார்களால் 105 கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டது என்றும், சுமார் 75,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒருவேளை மக்கள், மழைநீர் வடிகால்கள் வழியாக யாரேனும் கழிவுநீரை வெளியேற்றுவதை கண்டால், 1913 என்ற எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | பீஸ்ட் இயக்குநரை விமர்சிக்கும் தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR