தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Last Updated : Jan 7, 2020, 10:35 AM IST
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் title=

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. அதன்படி கடந்த 3 மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்பட மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில்  மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது.,

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News