தலைமை தேர்தல் அதிகாரி கூறியது:-
வரும் மே16-ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் எந்தவித அசம்பாவிதம் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல்துறை மேற்கொண்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் புகைப்படங்கள், வேட்பாளர் பெயர்கள், சின்னம் ஒட்டும் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. மேலும் தேர்தல் பணியில் 3லட்சத்துக்கு மேலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 85சதவீத வாக்காளர்களுக்கு மேல் பூத் ரசிது வழங்கப் பட்டுள்ளது. எந்த வாக்காளர்களுக்கு பூத் ரசிது கிடைக்கவில்லையோ போடோவுடன் கூடிய மற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
பணம் பதுக்கல் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள், வருமானவரித் துறையினர் சேர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல்துறை ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ரூ.102 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 2௦ பேர் கைது செய்யப் பட்டன.
மின்தடை ஏற்படுத்தப்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதைப்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்குப்பதிவு நாளான வரும் மே16-ம் தேதி தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. அதற்கான முன்னேச்சிரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கனமழை பெய்தாலும் பாதிப்பின்றி தேர்தல் நடத்த அணைத்து வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.