தலைநகர் தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று மாலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், இது குறித்து விளக்கம் அளித்த அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார்.
இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை, மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப் பட்டது. இதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், இரத்த நாளங்களில் அடைப்பு சரி செய்யப்பட்டு, அவர் உடல் நலன் தற்போது நன்ராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
ALSO READ | ரஜினிகாந்த் அண்ணாத்த பார்க்க தியேட்டருக்கு வருவார்: ஒய். ஜி. மகேந்திரன்
முன்னதாக, விருது பெற்ற பின், 70 வயதான நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) பிரதமர் நரேந்திர மோடியையும், குடியரசுத் தலைவரையும் சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே (Dadasaheb Phalke) விருது அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் காரணமாக, விருது வழங்கும் விழா நடத்தப்படவில்லை.
ரஜினி காந்த நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாளி அன்று வெளியாக உள்ள நிலையில், சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், நேற்று காலை தனது குடும்பத்தினருடன் 'அண்ணாத்த' திரைப்படத்தை பார்த்ததாகவும், அண்ணாத்த படத்தை பார்த்த ரஜினியின் பேரன் அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் HOOTE APP மூலமாக தனது சொந்த குரலில்பதிவிட்டிருந்தார். அது குறித்து தனது ட்விட்டர் பக்கதிலும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி! விளக்கம் அளித்த லதா ரஜினிகாந்த்!
முன்னதாக, இன்று காலை ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உறவினரும், நகைச்சுவை நடிகருமான ஒய்.ஜி மகேந்திரன் மருத்துவமனைக்கு சென்று, சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது, அண்ணாத்த பார்க்க நிச்சயம் தியேட்டருக்கு வருவார் என்றார்.
ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், மருத்துவர்கள், எச்சரிக்கையுடன் தொடர்ந்து தீவிரமாக உடல் நிலையை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ | ராகவா லாரன்ஸின் பிறந்தநாளன்று புதிய திரைப்பட அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR