ராஜிவ் கொலையாளிகள் விடுதலை சீராய்வு மனு இன்று விசாரணை

Last Updated : Aug 1, 2016, 01:14 PM IST
ராஜிவ் கொலையாளிகள் விடுதலை சீராய்வு மனு இன்று விசாரணை title=

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

கடந்த 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவில், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனையை பெறலாமே தவிர அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 பேரை விடுவிக்கும் முன் மத்திய அரசின் அனுமதியை மாநில அரசு பெற வேண்டும் என்ற அரசியல் சாசன அமர்வின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ராஜிவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு, சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால் 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News