சென்னை: தங்கம்,கியாஸ் சிலிண்டர்,பெட்ரோல் மற்றும் டீசல் இவைதான் எக்கச்சக்கமாக விலை உயர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது.தற்போது சமையலுக்கு உதவும் பருப்பு மற்றும் எண்ணெயின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்களை நடுநடுங்க வைக்கப்போகிறது. இந்த இக்கட்டான கொரோனா காலம் அதன் தாக்கத்தை மக்கள் மீது மட்டுமல்ல குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் மீதும் அதன் தாக்கத்தை செலுத்தியுள்ளது.இதுபோன்ற எதிர்பாராத விலையேற்றம் மக்களுக்கு வேதனையையே அளிக்கிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் வியாபாரி கூறுகையில்; "கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பணிகளும் வெகுவாக பாதித்துவிட்டன. விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கூலிக்கு வேலை செய்ய ஆட்களும் வருவது கிடையாது என்பதால் அரவை இயந்திரங்களிலும், கொள்முதல் நிலையங்களிலும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டு வருகின்றன. இதனால் மொத்த சந்தைகளுக்கும் அத்தியாவசிய பொருட்களான பருப்பு, எண்ணெய் மற்றும் தானியங்கள் போன்றற்றின் வரத்து அதிகளவில் பாதிக்கப்புக்கு உள்ளாகியுள்ளது.
அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே எண்ணெய் மற்றும் பருப்பு போன்ற சமையல் பொருட்களினு விலை சற்று உயர்ந்திருக்கிறது. பருப்பு வகைகளின் விலை ரூ.20 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்து காணப்படுகிறது. எண்ணெய் வகைகளின் விலையும் ரூ.30 ரூபாய் அளவு உயர்ந்துள்ளது. மேலும்,நறுமண பொருட்களின் விலையும் சற்று உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஒரு கிலோ கசகசா ரூ.1,100-ல் இருந்து ரூ.1,600 ஆக விலை உயர்ந்து காணப்படுகிறது. மிளகு ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆக உய்ந்துள்ளது.
அதேசமயம் பொருட்களின் வரத்து பாதிப்பு இல்லாத சூழலில் சில பொருட்களின் விலையும் குறைந்து காணப்படுவது சற்று ஆறுதலை தருகிறது அந்தவகையில் ரூ.1,800 வரை விற்பனையான ஒரு கிலோ ஏலக்காய் தற்போது ரூ.1,350-க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.140-ல் இருந்து ரூ.120 ஆக குறைந்துள்ளது. கொரோனாவின் வேகம் குறைந்து வருவதால், இனி வரும் நாட்களில் எண்ணெய், பருப்பு பொருட்களின் விலை கண்டிப்பாக குறைய வாய்ப்பு இருக்கிறது".என்று அவர் கூறினார். தொடர் மழை வெள்ளத்தால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகளின் விலையும் உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை வேதனை அடையச்செய்துள்ளது.இந்நிலையில் இந்தப் பொருட்களின் விலையேற்றம் அவர்களுக்கு பேரிடியாக இருக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ இரண்டாவது முறையாக அக்டோபரில் CNG விலை அதிகரிப்பு, முழு விவரம் இங்கே
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR