சூடுபிடிக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம்!

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து பல்வேறு சர்சரவுகளுக்கு பிரகு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

Last Updated : Dec 9, 2017, 11:39 AM IST
சூடுபிடிக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம்! title=

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து பல்வேறு சர்சரவுகளுக்கு பிரகு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் டிசம்பர் 21-ஆம் நாள் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். 

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக முன்னதாகவே அறிவித்துவிட்டன.

இந்நிலையில் தற்போது, அ.தி.மு.க உறுப்பினர் மதுசூதனன் தனது தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக முன்னெடுத்துள்ளார். அவருடன் அதிமுக ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News