அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் கொள்ளை!

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அதேபோல் கயவர்களின் கள்ளத்தனமான புத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2021, 08:50 PM IST
  • கொள்ளை நடந்த சம்பவத்தன்று கணவர் பணி நிமித்தமாக வெளியில் செல்ல,மனைவி உமா மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்
  • உமா மகேஸ்வரியிடம் ஒரு வாலிபர் நைசாக பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அதிகாரிகள் எனக்கூறி மூதாட்டியிடம் கொள்ளை! title=

குனியமுத்தூர்:  அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அதேபோல் கயவர்களின் கள்ளத்தனமான புத்தியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  ஒருவரிடம் எப்படியெல்லாம் நைசாக பேசி தங்களது வலையில் விழுக வைக்கலாம் என்ற வித்தையையும் கற்றுத்தேர்ந்தவர்கள்.

கோயம்புத்தூரில் குனியமுத்தூர் செல்வம் நகரில் வசிப்பவர் சந்தானம். இவரது தனது மனைவி உமா மகேஸ்வரி(65) ரொம்ப வருடங்களாக தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்த மூதாட்டியிடம் தான் கயவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

ALSO READ பேருந்துகள் கூடுதல் கட்டணம் வாங்கினால் கடும் நடவடிக்கை -அமைச்சர் எச்சரிக்கை

கொள்ளை நடந்த சம்பவத்தன்று கணவர் பணி நிமித்தமாக வெளியில் செல்ல,மனைவி உமா மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது சராசரியாக 35 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் நேர்த்தியாக உடையணிந்து அதிகாரிகள் போல் கெத்தாக வந்தனர்.  வந்தவர்கள் தங்களை மாநகராட்சி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு அவர்கள் அந்த மூதாட்டியிடம் நீங்கள் உங்களது வீட்டை உங்களது இடத்தில் தான் கட்டி உள்ளீர்களா? எனவும் வீட்டை அளவீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து உமா மகேஸ்வரியிடம் ஒரு வாலிபர் நைசாக பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.அந்த இடம்,வீடு,குடும்பம் குறித்து பல கேள்விகளை அந்த மூதாட்டியிடம் வினவிக்கொண்டிருந்தார்.அந்த மூதாட்டியும் அதிகாரி என நினைத்து ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பதிலுரைத்துக் கொண்டிருந்தார்.  அப்போது வந்தவர்களில் மற்றொரு வாலிபர் உள்ளே சென்று மெதுவாக பீரோவைத் திறந்து அதில் இருந்த தங்க வளையல், வைர கம்மல் உட்பட 5½ பவுன் நகைகளை திருடினார். பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது நகைகள் மாயமானது குறித்து தெரியவந்தது.இதனால் அதிர்ந்துப்போன உமா மகேஸ்வரி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

ALSO READ எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்க செய்த பாட்டி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News