வேலூர் மாவட்டம்: வேலூரில் ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கழிவுநீர் கால்வாயின் வழியாக உள்ளே புகுந்து வைர நகைகள் தங்கநகைகள் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் காவல்துறை துணை தலைவர் தலைமையில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமராக்கள் அனைத்திலும் ஸ்பிரே அடித்து, நூதன முறையில் கொள்ளையடித்து சென்ற கும்பல் வடநாட்டை சேர்ந்த கொள்ளையர்களின் கைவரிசையா இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடை உள்ளது. காலை வழக்கம் போல கடையை ஊழியர்கள் திறந்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மர்ம நபர்கள் கடையின் பின்புறமாக உள்ள கழிவுநீர் கால்வாயை உடைத்து துளையிட்டு நகைகடையினுள் நுழைந்து வைர நகைகள் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு மீண்டும் அதே வழியில் தப்பி சென்றுள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் நகைகடையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து கேமராக்களிலும் ஸ்பிரே அடித்ததால், கொள்ளையடித்து சென்ற கும்பலின் உருவங்கள் சரியாக அடையாளம் காண முடியவில்லை.
இந்தத் தகவலை அறிந்த வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் பாபு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சம்பந்தபட்ட கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.
ALSO READ | தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்: அச்சத்தில் மக்கள்!
மேலும் இக்கடையில் பணியாற்றும் ஊழியர்களிடமும் கைரேகைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். இந்த கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இரண்டாவது மாடியில் தங்கியுள்ளனர். மக்கள் நடமாட்டமுள்ள பிரதான சாலை மற்றும் இரவு 4 பேர் காவலர்கள் இருந்தும், இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டு முன்பு திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் இதேபோல் துளையிட்டு கொள்ளை நிகழ்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கொலையா? விபத்த? சாலையோரம் 5 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR