சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4.5லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்..!

சென்னை ஜெயின் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4.5லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 17, 2023, 01:52 PM IST
  • ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஜெயின் சமூகத்தினர் கொண்டாடும் பண்டிகை, பரியுஷன் பர்வ்.
  • இந்த நாளில் உதவி தேவைப்படுவோருக்கு அவர்கள் உதவி செய்து வருகின்றனர்.
  • 4.5 லட்சம் மதிப்பிலான உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு 4.5லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்..! title=

ரவுண்ட் டேபிள் 100, ஆர்.சி.சி மேக்னம் உள்ளிட்ட அமைப்புகள் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு 4.5 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை  வழங்கி உதவியுள்ளனர். 

பரியுஷன் பர்வ்:

ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஜெயின் சமூகத்தினர் கொண்டாடும் பண்டிகை, பரியுஷன் பர்வ். இதனை சாம்வத்ஸ்ரீ நாள் என்று சிலர் அழைப்பர். இதனை ஒரு புனித நாளாக அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர். இந்த நாளில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும் அது மட்டுமன்றி, இந்த நாளில் உதவி தேவைப்படுவோருக்கு அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவதை இவர்கள், வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்கள்... பாராட்டு மழையில் முதல்வர் ஸ்டாலின்!

மாற்று திறனாளிகளுக்கு உதவி:

ஜெயின் சமூகத்தினரின் புனித நிகழ்ச்சியான பரியுஷன் பர்வ் - வின் ஒரு பகுதியாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஶ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  ரவுண்ட் டேபிள் மார்ட் 100 அமைப்பின் தலைவர் டிஆர் நிதின் விமல், ஆர்.சி.சி. மேக்னம் தலைவர் விகாஸ் பூத்ரா ஆகியோரின் முயற்சியில்  ரவுண்ட் டேபிள் 100 திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் போரா ஒருங்கிணைக்க வசதியற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளிக்கும் வகையில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவில் 12 மூன்று சக்கர வாகனங்கள், 28 தையல் இயந்திரங்கள் மற்றும் 6 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. இந்த பயனாளிகளை  உதவிக்கரம் அமைப்பின் தலைவர் வரதக்குட்டி அடையாளம் கண்டு உதவியுள்ளார்.

மேலும் படிக்க | அரசு பள்ளிகளில் தரமற்ற சைக்கிள் வழங்கியதாக புகார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News