’ஆபாச பேச்சு’ ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது..!

ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட, 'ரவுடி பேபி' சூர்யா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - S.Karthikeyan | Last Updated : Feb 25, 2022, 08:22 AM IST
  • ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
  • சமூகவலைதளங்களில் ஆபாசமாக பேசியதால் நடவடிக்கை
  • தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் புகார்
’ஆபாச பேச்சு’ ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது..!  title=

மதுரை திருநகரை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்ற ரவுடி பேபி சூர்யா. திருப்பூரில் வசிக்கும் இவர், 'ரவுடி பேபி' சூர்யா என்ற பெயரில் நடத்தும், 'யுடியூப்' சேனலில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்தார். வேண்டாதவர்களை தாறுமாறாக திட்டியும், ஆபாசமாக பேசியும் வீடியோ வெளியிடுவதுடன், 'போலீசில் புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது' என்று வசனம் பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்.

மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்

இவரது நண்பரான சிக்கந்தர்ஷாவும், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இவர்களால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், மதுரையில் இருந்த இருவரையும் கடந்த மாதம் 4ஆம் தேதி கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூர்யா,  மீது தமிழகம் முழுதும் புகார்கள் இருப்பதாக, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல்கள் வந்துள்ளன.ஏற்கனவே சில இடங்களில் வழக்கும் பதியப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க | வலிமை படம் ரிலீஸ்...! திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு...!

இந்த விபரங்களை சேகரித்து வந்த போலீசார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரைபடி ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News