விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம் - முதல்வர் உத்தரவு

Last Updated : Feb 21, 2017, 03:08 PM IST
விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம் - முதல்வர் உத்தரவு title=

விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணத் தொகை வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இன்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 

அதில் கூறியதாவது:- 

விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணத் தொகை வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். நிவாரணத் தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனே செலுத்தவும் வலியுறுத்தியுள்ளார். மொத்தமுள்ள 16,628 வருவாய் கிராமங்களில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,564 கிராமங்களில் 87% வரை நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து 28,99,877 விவசாயிகளுக்கு சொந்தமான 46,27,142 ஏக்கருக்கு ரூ.2,049 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.2,428 முதல் ரூ.3,000 வரை உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பால் 14.99 லட்சம் விவசாயிகள் ரூ.4,800 முதல் ரூ.69,000 வரை காப்பீடு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நெற்பயிர் இதர பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465 தரப்படும் என்று கூறினார். மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,000 மற்றும் நீண்டகால பயிருக்கு ஏக்கருக்கு ரூ.7,287 வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.2,428 முதல் ரூ.3,000 வரை உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

Trending News