சைதாப்பேட்டையில் பயங்கரம்..! ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்..!

Saidapet Railway Station Women Murder: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று ஒரு பெண் மர்ம நபரால் கொடூரமாக வெட்டப்பட்டார். 

Written by - Yuvashree | Last Updated : Jul 20, 2023, 10:05 AM IST
  • சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார்.
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
  • சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சைதாப்பேட்டையில் பயங்கரம்..! ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்..! title=

சென்னையின் முக்கிய நகரங்களில் ஒரு பகுதியான சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று ஒரு பெண் மர்ம நபரால் கொடூரமான முறையில் வெட்டப்பட்டார். 

ரயில் நிலையத்தில் கொடூர சம்பவம்..!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ராஜி என்கிற ராஜேஸ்வரி. இவருக்கு 35 வயது ஆகிறது. இவர், சென்னை மின்சாரம் ரயிலில் பழம் மற்றும் சமோசா வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ராஜி, நேற்று மாலை சுமார் 8 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் சமோசா வியாபாரம்  செய்துவிட்டு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அவருடன் சேர்ந்து அந்த ரயிலில் இருந்து ஒரு மர்ம நபரும் இறங்கியுள்ளனர். அவர்,  ராஜேஸ்வரியை கத்தியை கொண்டு முகம் மற்றும் வயிற்றுப் பகுதி என பல இடங்களில் சரமாரியாக வெட்டி உள்ளார். 

மேலும் படிக்க | மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த தனது உயிரை தியாகம் செய்த தாய்..!

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:

மர்ம நபரால் தாக்கப்பட்ட ராஜேஸ்வரி, பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த பயணிகள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் ராஜேஸ்வரியை மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலிய உதவி சிகிச்சை வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

Saidapet Murder

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை  பெற்று வந்த ராஜேஸ்வரி, இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

குற்றவாளி யார்..?

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் தற்போது வரை ராஜேஸ்வரியின் கொலையில் எந்த ஒரு துப்பும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு மூன்று கணவர்கள் உள்ளதாகவும் இதனால் அவர், குடும்ப பிரச்சனையின் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர்  விசாரணையை துவக்கி உள்ளனர்.

மேலும் படிக்க | சிறுவனின் கொலையில் திடீர் திருப்பம்..! பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அம்பலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News