Samsung Workers Protest | சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்! நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

Samsung Workers Protest Latest Update: சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 9, 2024, 02:02 PM IST
Samsung Workers Protest | சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்! நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் title=

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu: சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரக்கூடிய நிலையில், அரசு தரப்பு விளக்கங்களை கொடுக்க தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறியது என்ன என்பதைக் குறித்து பார்ப்போம்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது, 

சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது.

சிஐடியூ தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

சாலை விபத்தின் போது அங்கு வந்த காவலர்களை தாக்கியவர்களே கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை. சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 

"தொழிற்சங்கத்தை பதிவு செய்ய சி.ஐ.டி.யூ சங்கம் கடிதம் அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாம்சங் நிறுவனம் கடிதம் அனுப்பியது.

நீதிமன்றத்தில் உள்ள இவ்விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை தமிழக அரசு செயல்படுத்தும்.

அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால், எப்போதும் போல காவல்துறை கைது செய்து, பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை.

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது.

இவ்விவகாரத்தில் சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும்.

சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை

- இவ்வாறு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மேலும் - தமிழக அரசு சூப்பர் பிளான்.. 3 நாள் தொடர் விடுமுறை.. www.tnstc.in

மேலும் - கிசுகிசு : இயக்குநர் கட்சியின் கூடாரம் காலி, நடிகர் கட்சிக்கு தாவும் இளசுகள்

மேலும் - தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. 2024 தீபாவளி பரிசு அறிவிப்பு வருகிறது..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News