Tamil Nadu Government Special Bus: அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவதால், தமிழக அரசு முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறை
வருகிற 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆயுத பூஜை என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறையாகும். மறுநாள் சனிக்கிழமை விஜயதசமி என்பதால் விடுமுறை மற்றும் வருகிற 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதற்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்து
அதாவது சென்னையில் இருந்து இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கம் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முன்பதிவு செய்து பயணம் செய்யுங்கள்
இதுக்குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் கூறுகையில், ஆயுத பூஜை விடுமுறையை அடுத்து அனைத்து போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை (10 ஆம் தேதி) பயணத்திற்கு 13,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பயணம் செய்ய மொத்தம் 31000 பேர் முன்பதிவு செய்து காத்து இருக்கிறார்கள். இதில் சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 18000 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்றார். 364 அரசு விரைவு பேருந்துகளுக்கும், 40 பிற போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் முன்பதிவு நடக்கிறது. நீண்ட தூரம் செல்லக்கூடியவர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டால் கடைசி நேரக் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
தற்காலிக பணியாளர்களை நியமனம்
மேலும் ஆயுத பூஜை விஜயதசமி மற்றும் தீபாவளி என்று தொடர்ந்து பண்டிகை வருவதால் வெளியூர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருகை தருகின்றனர். அவர்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய கூடுதல் பேருந்துகளும் தற்காலிகமாக பணியாளர்களையும் நியமிக்க போக்குவரத்துக்கு கழகங்கள் முடிவெடுத்துள்ளது என்றார்.
கோயம்பேட்டிலிருந்து இயக்கும் சிறப்பு பேருந்துகள்
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி (புதன்கிழமை) 35 பேருந்துகளும், அக்டோபர் 10 ஆம் தேதி (வியாழக்கிழமை) 265 பேருந்துகளும் மேற்கூறிய இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கும் சிறப்பு பேருந்துகள்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு அக்டோபர் 9 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று 225 பேருந்துகளும், அக்டோபர் 10 ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மாதவரத்திலிருந்து இயக்கும் சிறப்பு பேருந்துகள்
சென்னை மாதவரத்திலிருந்து அக்டோபர் 9 ஆம் தேதி (புதன்கிழமை) மற்றும் அக்டோபர் 10 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப சிறப்பு பேருந்து
அதேபோல விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டு உள்ளது.
சிறப்பு பேருந்து முன்பதிவு எங்கு செய்வது?
பயணம் செய்ய www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்துக்கு கழகங்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - கிசுகிசு : இயக்குநர் கட்சியின் கூடாரம் காலி, நடிகர் கட்சிக்கு தாவும் இளசுகள்
மேலும் படிக்க - பண்டிகை காலத்தில் சிக்கனமாக செலவு செய்ய டிப்ஸ்! பர்ஸ் காலியாகாம பாத்துக்கலாம்…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ