சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!!

Updated: Oct 6, 2017, 03:02 PM IST
சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!!
Zee Media

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை காண சில நிபந்தனைகளுடன் 5 நாள் பரோலில் வருகின்றார் சசிகலா. 

விவரம்:-

சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா  உள்ளார்.

அவரை வரவேற்றார்  டிடிவி தினகரன் 

விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்.

சிறை வளாகம் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நிபந்தனை:

* அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள அனுமதி இல்லை

* தனது வீட்டிற்கும், மருத்துவமனைக்கும் மட்டுமே செல்ல அனுமதி

* அரசியல் சம்பந்தமான விசியத்தில் ஈடுபடக்கூடாது

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை காண 15 நாட்கள் பரோல் வேண்டும் என சசிகலா மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஐந்து நாள் மட்டுமே பரோல் கிடைத்தது.