நடிகரின் கால்களை உடைத்த பாஜக நிர்வாகிகள்... மோடிக்கு எதிராக கருத்துதான் காரணமா - பின்னணி என்ன?

பெண்களுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் காமெடி நடிகரை கால்களை உடைக்க, நடிகரின் மனைவி பாஜகவினரை அடியாட்களாக மாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் முழு பின்னணியையும் இதில் காணலாம்.   

Written by - Sudharsan G | Last Updated : Jun 18, 2023, 04:14 PM IST
  • அசத்தப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் வெங்கடேஷ் பங்கேற்றார்.
  • வெங்கடேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
  • பாஜகவினர், நடிகரின் மனைவி உட்பட 6 பேர் கைது.
நடிகரின் கால்களை உடைத்த பாஜக நிர்வாகிகள்... மோடிக்கு எதிராக கருத்துதான் காரணமா - பின்னணி என்ன? title=

மதுரையை சேர்ந்த வெங்கடேஷ். இவர் கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள காமெடி நடிகராகவும், சன் டிவி, விஜய் டிவிதனியார் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்

இவர் மதுரை தபால்தந்திநகர் 3ஆவது தெரு பகுதியில் சொந்த வீட்டில் தனது காதல் மனைவியான பானுமதியுடனும் , ஒரு பெண் குழந்தையுடனும் வசித்துவந்துள்ளார். காமெடி நடிகர் வெங்கடேஷ் யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அப்டேடாக இருப்பவர்

இதனிடையே வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனிடையே அவ்வப்போது கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுவந்தது.

தகாத உறவா?

காதலித்து திருமணம் செய்த தனது கணவர் பல பெண்களோடு திருமணத்தை தாண்டிய உறவுடன் பழகியும் வந்துள்ளார் என மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி பானுமதி வெங்கடேஷை கால்களை உடைத்து வீட்டிற்குள்ளயே முடக்க வேண்டும் என தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வெங்கடேஷின் ஓட்டுநரின் மூலமாக ராஜ்குமார் என்பவர் மூலமாக 1 லட்சம் ரூபாய் கொடுத்து வெங்கடேஷின் கால்களை உடைக்க திட்டமிட்ட நிலையில் திட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | எத்தனை சூடுபட்டாலும் திருந்தாத ஜென்மம் ஆளுநர் ஆர்.என்.ரவி - முரசொலி கடும் விமர்சனம்

பாஜகவுக்கு எதிரானவர்?

இதனால் மற்றொரு திட்டம் தீட்டிய பானுமதி, தனது உறவினரும், பாஜக நிர்வாகியுமான கோசாகுளம் பகுதியை சேர்ந்த பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்துவிடம் பிரச்சனையை கூறியுள்ளார். இதனையடுத்து பானுமதிக்கு உதவுவதாக கூறிய பாஜக நிர்வாகி வைரமுத்து, பாஜக நிர்வாகிகள் இருவரை  சந்தித்து, 'காமெடி நடிகர் வெங்கடேஷ் தனது சமூகவலைதள பக்கங்களில் பாஜக குறித்தும், பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை குறித்தும் அவர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவிட்டுவருகிறார், எனவே அவரை மிரட்டி அவரது கால்களை உடைப்போம்' என கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காமெடி நடிகர் வெங்கடேஷ் தபால்தந்திநகர் காரில் வந்தபோது காரை வழிமறுத்து ஓட்டுநரிடம் கத்தியை காட்டி மிரட்டிய, பின்னர் வெங்கடேஷை நாராயணபுரம் பகுதிக்கு கடத்திசென்று கால்கள் இரண்டையும் உடைத்துள்ளனர். 

நாடாகமாடிய குடும்பத்தினர்

இதனையடுத்து காயமடைந்த நிலையில் கிடந்த வெங்கடேஷை, அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அப்போது மருத்துவமனைக்கு சென்ற வெங்கடேஷின் மனைவி மற்றும் வைரமுத்து, ஓட்டுநர் மோகன் ஆகியோர் கண்ணீர்விட்டு அழுதபடி நாடகமாடியுள்ளனர்.

இதனையடுத்து வெங்கடேஷின் கார் ஓட்டுநரான மோகன் தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழுதுபுரண்டபடி நடித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணையில் அம்பலம்

அப்போது காமெடி நடிகர் வெங்கடேஷின் மனைவி பானுமதி தூண்டுதலின் பெயரில், வெங்கடேஷின் ஓட்டுனர் மோகனின் உதவியோடு வெங்கடேஷை தாக்கியதும் தெரியவந்துள்ளது. இதேபோன்று தனது உறவுக்கார பெண்ணின் குடும்ப பிரச்சனைக்காக பாஜக நிர்வாகி, பாஜகவினரை அடியாட்களாக பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காமெடி நடிகரான தனது கணவரை சதி திட்டம் தீட்டிய வெங்கடேஷின் காதல் மனைவியான  பானுமதி, வெங்கடேஷின் கார் ஓட்டுனரான மதுரை சொக்கிகுளம் பகுதியை சேர்ந்த மோகன் என்ற பென்ஸ் மோகன், மதுரை புதூர் கற்பகம் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகளான மதுரை கோசாகுளம் பகுதியை சேர்ந்த பாஜக பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினர் வைரமுத்து, செல்லூர் பகுதியை சேர்ந்த பாஜக 28ஆவது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவர் மலைச்சாமி , மதுரை மேலபனங்காடி பாஜக கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ் ஆகிய 6 பேரையும் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | மாவட்ட ஆட்சி தலைவருக்கே இந்த நிலைமையா? ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News