ரஜினி ரசிகர்களுக்கு கிடா விருந்து - தடுக்கும் பீட்டா அமைப்பு!!

ரசிகர்களுக்கான ஆட்டுக்கறி விருந்தை தடுத்து நிறுத்த வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த்க்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

Last Updated : Jan 5, 2018, 06:52 PM IST
ரஜினி ரசிகர்களுக்கு கிடா விருந்து - தடுக்கும் பீட்டா அமைப்பு!!  title=

நடிகர் ரஜினி கடந்த 31-ம் தேதி தான் அரசியலுக்கு வருவதாகவும், மேலும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனிக்கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பதிவு செய்யப்படதா தனது ரசிகர் மன்றத்தை பதிவு செய்யுமாறும், ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார். 

தனது அரசியல் நுழைவு அறிவிப்பதற்கு முன்பு, ரசிகர்கள் சந்திப்பில் (டிசம்பர் 28), மதுரை, சேலம், விருதுநகரில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் இந்த ராகவேந்திரா மண்டபம் முழுக்க சைவம். அதை வேறு இடத்தில் வேறுமாதிரி எப்போதாவது வைத்துக்கொள்வோம். உங்களை பார்க்கும்போது உங்களின் உற்சாகத்தையும் உணர்ச்சிகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என கூறினார். இவரின் பேச்சுக்கு ட்விட்டரில் பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதைதொடர்ந்து மதுரையில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தால், ரசிகர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து கொடுக்க ஏற்பாடு செயப்பட்டு வருகிறது என்ற செய்து பரவியது. 

இந்நிலையில், ரசிகர்களுக்கான ஆட்டுக்கறி விருந்தை தடுத்து நிறுத்த வேண்டும். மாமிசத்தை விருந்தாக அளிக்க கூடாது என்று பீட்டா அமைப்பு நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

Trending News