South Chennai Tamil Nadu Lok Sabha Election Result 2024: சென்னையில் உள்ள தென் சென்னை மக்களவை தொகுதி முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள முக்கிய பகுதிகள் இந்த தொகுதிகள் வருகின்றன. கடந்த முறை 2019 மக்களவை தொகுதியில் கடும் போட்டியில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். திமுகவை சேர்ந்த இவர் 3,02,649 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தனை தோற்கடித்தார் தமிழச்சி தங்கபாண்டியன். இந்த பகுதியில் 2019ல் 56.34 % வாக்குகள் பதிவானது. இந்த ஆண்டு 54.27 சதவீதமாக உள்ளது.
தென் சென்னை சட்டமன்ற தொகுதிகள் விவரம்
விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை
தியாகராய நகர்
வேளச்சேரி
மயிலாப்பூர்
சோழிங்கநல்லூர்
மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி
தென் சென்னை தொகுதி மொத்த வாக்காளர்கள்
மொத்த வாக்காளர்கள் :20,23,133
ஆண் வாக்காளர்கள் : 10,00,851
பெண் வாக்காளர்கள் :10,21,818
மூன்றாம் பாலினத்தவர் : 464
தென் சென்னை தொகுதி வேட்பாளர்கள் யார்?
இந்த ஆண்டு 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் ஜெயவர்தன் போட்டியிட்டுள்ளார். பாஜக சார்பில் கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டுள்ளார். மேலும் தற்போது எம்பியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ச் செல்வி போட்டியிட்டுள்ளார்.
ஆனாலும் பாஜக மற்றும் திமுக இடையே தான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் வருகின்றன.
தென் சென்னை தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?
கடந்த 2019 தேர்தலில் தமிழச்சி தங்கபாண்டியன் 564872 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருந்தார். அதே சமயம் அதிமுகவின் ஜெயவர்தன் 302649 வாக்குகள் பெற்று இருந்தார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த ரங்கராஜன் 135465 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த முறை பாஜகவும் போட்டியில் இணைந்துள்ளது. எனவே பாஜக மற்றும் திமுக இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழிசை சவுந்தரராஜன் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து போட்டியிட்டுள்ளார். மேலும் சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இவருக்கு கடும் போட்டியாளராக உள்ளார். ஆனாலும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEata